உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி, கோவைக்கு ரெட் அலெர்ட்: 8 மாவட்டங்களில் மழை தொடரும்

நீலகிரி, கோவைக்கு ரெட் அலெர்ட்: 8 மாவட்டங்களில் மழை தொடரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், நீலகிரி, கோவைக்கு அதி கன மழைக்கான, 'ரெட் அெலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் 15 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14; சாம்ராஜ் எஸ்டேட், மேல் பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதிகளில் தலா 13; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சியில் தலா, 12; கோவை மாவட்டம் சோலையார் 11; திருநெல்வேலி மாஞ்சோலை, நீலகிரி குந்தா பாலம் தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது.நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், 'ரெட் அெலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்சு அெலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில், கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும் நாளையும் மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

5 நாட்களில், 108 செ.மீ., மழை

வானிலை மைய தலைவர் அமுதா கூறியதாவது: நீலகிரி, கோவையில் ஐந்து நாட்களாக கனமழை பெய்கிறது. அதிகபட்சமாக, அவலாஞ்சியில், 108 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 70 செ.மீ., பெய்துள்ளது. மேல்பவானி, எமரால்டு பகுதிகளில் 70 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 29, 2025 12:28

இந்த நேரத்தில் முதல்வரும், அந்த பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள் அந்த இடத்தில் தங்கி இருந்து மக்களை மழைவெள்ள அபாயத்திலிருந்து காப்பாற்றுவது நல்லது. ஆனால் அவர்கள், அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, ஜாலியாக சென்னையில் குடும்பத்தினருடன் அல்லது பொதுவெளியில் கூட்டம் போட்டு நேரத்தை செலவழிக்கிறார்கள். மக்களை பேரிடரிலிருந்து காப்பாற்ற தெரியாத இவர்கள் இருந்து........ ??


Manaimaran
மே 29, 2025 07:24

மழை காலம் பெய்யும் இதுல சிகப்ப பச்சை னுட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை