உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் பெயில் ஆவதை தவிர்க்க பாடங்கள் எண்ணிக்கை குறைப்பு

தமிழில் பெயில் ஆவதை தவிர்க்க பாடங்கள் எண்ணிக்கை குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் பாடத்தில், மாணவர்கள் தோல்வி அடைவதை தவிர்க்க, பாடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில், பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறை, கடந்த, 2017ல் வடிவமைத்த பாடப்புத்தகங்கள்தான், தற்போது வரை நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், தமிழ் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைவது அதிகரிப்பதால், வரும் கல்வியாண்டு முதல், பாடங்களின் அளவை குறைக்கும் நடவடிக்கையில், பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டு உள்ளது.தமிழக அரசின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்தான் பாடத்திட்டத்தை வடிவமைக்கிறது. இதற்காக பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்படுகிறது. அதன் பரிந்துரை அடிப்படையில், பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பாடங்களை குறைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நம் மாநில பாடத்திட்ட பாடங்களின் பல பகுதிகளில் இருந்து, நீட் உள்ளிட்ட தேசிய தேர்வுகளில், வினாக்கள் இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதிகளை படிப்பதைவிட, கேள்விகள் இடம்பெறும் பகுதிகளை, அறிவியல் பாடத்தில் சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.அதேநேரம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, பாட வேளைகள் அதிகமாகவும், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு, பாட வேளைகள் குறைவாகவும் உள்ளன. இதனால், அதிக பாடங்களை, குறைந்த பாட வேளைகளில் எடுக்க முடியவில்லை என மொழி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தனியார் பள்ளிகளில், ஆறு நாட்கள் வேலை நாட்களாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளி செயல்படுகிறது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள், தமிழ், ஆங்கில வாசிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளதால், அவர்கள் அதிகம் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். இதை பரிசீலித்த அரசு, தற்போது பாடங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, தமிழ் பாடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை குறைக்கவும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடங்களில், இரண்டை குறைக்கவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.குறைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன் தயாராகி விடும். இதேபோல், மற்ற பாடங்களிலும் பகுதிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

adalarasan
ஏப் 10, 2025 22:23

மும்பு கருணாநிதி அவர்கள் ஒரு சட்டம் கொண்டு வந்தார். பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் பாஸ் போட வேண்டும் மேலும், புத்தகத்தில் chapter முடிவில் கொடுத்திருக்கும் கேள்விகள் மட்டும்தான் கேட்கவேண்டும் . [பொழுது அமைச்சர்,pada புத்தகத்தையே மாற்றி, சாப்டர்கள் குறைக்க சொல்கிறார்.பலே ஐடியா போஙக .


anonymous
ஏப் 10, 2025 21:53

கணிதம் மற்றும் அறிவியலும் மாணவர்களுக்கு சிறிது கடினமாக இருப்பதால் இவ்விரண்டையும் நீக்கிவிட்டு பெரியாரின் வாழ்கையியல், கருணாநிதியின் களவியல் போன்ற அறிவுசார்ந்த பாடங்களை சேர்க்கலாம்.


c.mohanraj raj
ஏப் 10, 2025 15:45

இதற்கு எதற்கு தேர்வு வைத்து நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும் பேசாமல் வந்தாலே பாஸ் என்று சொல்லிவிடலாமே அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது கல்வி


murugu
ஏப் 10, 2025 14:26

புத்தகமே வேணங்க


Chan
ஏப் 10, 2025 13:18

இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க யோசித்து செய்வதைவிட தேர்வே இல்லாமல் அணைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றார்கள் என அறிவித்துவிடலாமே....


Muthu Kumaran
ஏப் 10, 2025 15:10

திராவிடமாடல் கட்சி சாதனை


எவர்கிங்
ஏப் 10, 2025 13:10

பேசாமல் தமிழ் தேர்வையே குறைத்து விடுங்க


vbs manian
ஏப் 10, 2025 12:56

பயங்கர சமாளிப்பு. இவர்கள் தமிழ் பணி கொடியேறுகிறது.


Savitha
ஏப் 10, 2025 12:42

அடுத்த தலைமுறைக்கு துண்டு சீட்டு வைத்து பேச தெரிந்தால் போதும், அப்ப தானே , நாளைய சரித்திரத்தில், நமது முதல்வர் துண்டு சீட்டு வைத்து ஓட்டி, ஆட்சி புரிந்தார் அப்டின்னு பேச மாட்டாங்க, வரும் தலைமுறையே துண்டு சீட்டு கும்பலா மாத்திட்டா.. ஒரு பய நாளைக்கு நம்ம முதல்வரை நாக்கு மேல பல்ல போட்டு, துண்டு சீட்டு அப்டின்னு சொல்ல முடியாது இல்லையா? எப்படி ஒரு அருமையான திட்டம், வாழ்க தமிழ்.


Sivagiri
ஏப் 10, 2025 12:16

இது தமிழர்களுக்காக அல்ல - தமிழர் அல்லாத மற்ற திராவிடர்களின் பிள்ளைகளுக்காக, தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள், உருதர்கள் - இவர்களுக்காக, சும்மா தமிழ் பரிட்சையில், பேப்பரை பெயர் மட்டும் எழுதிக் கொடுத்ததால் பாஸ் போட்டு, அரசு வேலைக்கு தகுதி ஆனவர் ஆக்குவதற்காக . . . இதுதான் தமிழை வளர்க்கும் திருட்டு மாடல் என்பது . . .


நாஞ்சில் நாடோடி
ஏப் 10, 2025 11:54

கல்வி கண்ணை திறந்தவர் காமராஜர். தற்போது அதே கண்ணில் மண்ணை அள்ளி போடுவது திராவிட மாடல்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை