உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2050ம் ஆண்டிற்குள் கார்பன் மாசு குறைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2050ம் ஆண்டிற்குள் கார்பன் மாசு குறைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மத்திய அரசு 2070ம் ஆண்டுக்குள், கார்பன் மாசு பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு 2050ம் ஆண்டுக்குள், அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும், கால் வயிறு, அரை வயிறு சாப்பிட்டும் தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை, இந்தியா என்றைக்கும் மறக்காது. இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என, உலகமே அவரை அழைக்கிறது. நமக்கு அவர் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் இருந்தார். இன்றைக்கு உலகமே பேசும் காலநிலை மாற்றம் குறித்து, 50 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு, 50, 60 ஆண்டுகளுக்கு முன், நாடு இருந்த நிலைமை தெரிய வாய்ப்பில்லை. விடுதலைக்கு பிறகு, இந்தியாவை கட்டமைத்து கொண்டிருந்த காலம் அது. மக்களின் உணவு தேவை, அவ்வளவு எளிதாக பூ ர்த்தி அடையவில்லை; பசியால் பலர் இறந்தனர். அந்த நிலைமை எல்லாம் இன்றைக்கு மாறியிருக்கிறது. அதற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னெடுத்த, பசுமை புரட்சியே முக்கிய காரணம். சத்தான மற்றும் பெரும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிர்களை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும். வேளாண்மைக்கான நவீன கருவிகளை, குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். இதற்கெல்லாம் அச்சாரமாக, தி.மு.க., அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. மத்திய அரசு, 2070ம் ஆண்டுக்குள் கார்பன் மாசு பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு, 2050ம் ஆண்டிற்குள் அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, பன்னீர் செல்வம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன், தலைமை தபால் துறை தலைவர் மரியம்மா தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராஜாராம்,நத்தம்
செப் 28, 2025 15:00

2050 ம் ஆண்டு தயிர் வடையுடன் ......


Venugopal S
செப் 28, 2025 13:40

2047 க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றி விடுவோம் என்று பிரதமர் மோடி சொன்னால் கைதட்டி பாராட்டி ஏற்றுக் கொள்வோம், தமிழக முதல்வர் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!


பாரத புதல்வன்
செப் 28, 2025 10:57

கார்பன் மாசு இருக்கட்டும் உன் கட்சியில் இருக்கும் அரசியல் மாசுகளை 2100 க்குள்லாவது அகற்ற முடியுமா மன்னா!


Kasimani Baskaran
செப் 28, 2025 09:46

அதற்குள் இந்தியாவின் ஜிடிபிக்கு இணையாக கடன்வாங்கி தமிழகம் ஜமாய்க்கும்..


Shekar
செப் 28, 2025 09:31

2050 க்கு முன்னாடி யாரும் இதப்பத்தி கேட்கக்கூடாது. கார்பன் மாசு பத்தி பேச 2050 ல்ல வாங்க,


vbs manian
செப் 28, 2025 09:08

இதைத்தான் டிரம்ப் புடின் மற்றும் பலர் ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2025 07:58

கார்பன் மாசு கவலையே படாதீங்க கிம்ச்சை மன்னரே...


ManiK
செப் 28, 2025 07:20

கார்பன் மாசு அழிப்பு இருக்கட்டும்... அழிப்பு எப்போது?? #வெற்று அறிக்கை ஸ்டாலிள்


அப்பாவி
செப் 28, 2025 06:13

பலே பலே. அதுவரைக்கும் ஓயாமாட்டேன். நானே முதல்வர், ப்ரதமர்.


சமீபத்திய செய்தி