6 மாதத்தில் 12 சதவிகிதம் உயர்ந்த ரிலையன்ஸ்
'ரி லையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில், 52 வார புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இப்பங்கின் விலை, 11.53 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு, சில்லரை மற்றும் எரிசக்தி பிரிவுகளின் சிறந்த வளர்ச்சியே பங்கு விலை உயர்வுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய எரிசக்தி வணிகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, 2027ம் நிதியாண்டில், இந்நிறுவன வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். நேற்றைய வர்த்தக நேர முடிவில், இந்நிறுவன பங்குகள் 0.27 சதவீதம் உயர்ந்து, 1,540 ரூபாயில் முடிந்தன.