உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு நிம்மதி: மன்னிப்பு கோரியதால் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு நிம்மதி: மன்னிப்பு கோரியதால் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மன்னிப்பு கோரியதை தொடர்ந்து, அவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.பெங்களூரு ‛ ராமேஸ்வரம் கபே' ஓட்டலில், கடந்த மார்ச்சில் குண்டுவெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர் கர்நாடகாவில் குண்டு வைப்பதாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஷோபா பேசினார். அவரின் பேச்சுக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை தூண்டுதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை நகர போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று முன்தினம்( செப்.,03) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், மன்னிப்பு கோரி பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக , மத்தியஇணை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறிப்பட்டு இருந்தாவது: தமிழக மக்கள் குறித்து நான் கூறிய கருத்து எவ்வித உள்நோக்கமும் கொண்டதல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கமின்றி கூறப்பட்டது. அந்த கருத்து தமிழர்களை புண்படுத்தியதை அடுத்து, சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேரரினேன். தமிழர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என் செயல்கள் வாயிலாக, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷோபா மன்னிப்பை தமிழக மக்கள் சார்பாக ஏற்றுக் கொள்வதாகவும், இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஷோபா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

kulandai kannan
செப் 06, 2024 12:14

உதயநிதி எப்போது ??


venugopal s
செப் 05, 2024 21:49

இவர் பேசியதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் இவர் பேச்சுக்கு தமிழக பாஜகவினர் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்காதது மிகப் பெரிய குற்றம்! தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை உள்ள கட்சி பாஜக!


Sathyanarayanan Sathyasekaren
செப் 06, 2024 02:36

அவர் பேசியது உண்மை என்று NIA சென்னையில் செய்த கைதுகள் நிரூபித்தன. உன்னை போன்ற கொத்தடிமை, அந்நிய நாட்டு மத சொம்பு தூக்கிகளுக்கு தான் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லை. கோவை குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்ன அறிவாளிகள் தானே நீங்கள். உண்மையில் பயங்கரவாதிகளை தமிழகத்தில் வேரூன்றவிட்டதற்கு , திருட்டு திராவிட கொத்தடிமைகளும்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.


ஆரூர் ரங்
செப் 06, 2024 12:04

ஆ ராசா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுகளுக்கு திமுகவினரிடமிருந்து கண்டனமேதும் வரவில்லை. ஆனால் பதவிகளில் தொடரும் கேவலம். தீப்பொறியார் வளர்த்த கழகமாயிற்றே.


Ram
செப் 05, 2024 21:33

தமிழக மக்கள் சார்பாக ஒத்துக்கொள்ள இந்த வக்கீல் யார்


Narayanan Muthu
செப் 05, 2024 20:11

வழியில் அசுத்தம் செய்வானேன் அதை வாரி கொட்டி அசிங்கப்படுவதேன்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 22:23

கொத்தடிமை நாரயாணன் முத்து, இப்படி எழுத வெட்கமா இல்லையா? உன் கண்களுக்கு NIA சென்னையில் செய்த கைதுகள் கண்ணில் படவில்லையா? அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் உண்மையை யாரும் மறைக்க முடியாது.


Barakat Ali
செப் 05, 2024 19:10

இனிமே தென்கிழக்கு பக்கமா தல வெச்சு படுக்காது இந்த அம்மணி ..... எல்லாம் எடியூரப்பா பார்த்துக்குவாரு .....


Velan Iyengaar
செப் 06, 2024 07:44

ரொம்போ நல்லா பார்த்துப்பாரு


Ramesh Sargam
செப் 05, 2024 18:57

இனி வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். பேசும்போது என்னபேசுகிறோம் என்று யோசித்து பேசவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 22:19

கொத்தடிமை ரமேஷ் சென்னையில் NIA செய்த கைதிகளை படிக்கவில்லையா? அமைச்சர் நாகரீகம் கருதி மன்னிப்பு கேட்டுஇருக்கிறார்.


ஆரூர் ரங்
செப் 05, 2024 18:49

நூறு சதவீதம் உண்மையைப் பேசிவிட்டு மன்னிப்புக் கேட்பது தகாது. மூர்க்க தீவீரவாத ஆட்களுக்கு தீயமுக ஊக்கம் தருவது உண்மைதானே?


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 22:21

சரியாக சொன்னீர்கள் அய்யா.


venugopal s
செப் 05, 2024 18:49

ஏதோ ஒன்றை அடிப்பானேன் ஏதோ ஒன்றை சுமப்பானேன் என்று சொல்வார்கள், அது உண்மை தான்!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 23:00

அப்போ தமிழகத்திலிருந்து போனவர்கள் அந்த ஏதோ ஒன்றா ????


Sivakumar
செப் 05, 2024 17:16

இதே தொனியில் ராகுல் காந்தியின் வழக்கு விடுவிப்புகளையும் பதிவிட்டால் ஒரு சமநிலை தெளிவாகும்


புதிய வீடியோ