உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால்வளம் பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

பால்வளம் பறிபோனது ஏன்; மனோ தங்கராஜ் சொல்றதை கேளுங்க!

சென்னை: தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக, பதவி பறிகொடுத்த மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 9.5 சதவீதம் என்றிருந்தது; ஒரே ஆண்டில் 2022ல் 16.4 சதவீதமாகவும், 2023ல் 25 சதவீதமாகவும் உயர்ந்தது.

பால் உற்பத்தி அதிகரிப்பு

கடந்த 2023ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. 2024ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

பிரிவினை அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். இவ்வாறு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

என்ன காரணம்

'தன் மீது தவறு எதுவும் இல்லை, தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் தான் மிகச்சிறப்பாக செயல்பட்டேன்' என்று கூறும் வகையில் மனோ தங்கராஜ் அறிக்கை அமைந்துள்ளது. அப்படியெனில், அமைச்சர் என்ன காரணத்தால் நீக்கப்பட்டார் என்பதை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

கல்யாணராமன் சு.
அக் 04, 2024 15:35

அப்படி இருக்கிறவர் / இருந்தவர் , எதற்காக தன்னோட பிரியாவிடை அறிக்கையில் மதவாத சக்தியை மாவட்டத்தில் பரவ விடாமல் தடுத்தேன் என்று புளகாங்கிதம் அடையவேண்டும் ?


saminathan R
செப் 30, 2024 10:46

நீங்க தியாகி இல்லையே என்னாச்சி?


Matt P
செப் 30, 2024 09:18

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரங்க இப்படி தான். சில நேரங்களில் வணங்காமுடிகள். நாஞ்சில் மனோகரன் ஒரு தடவை கட்சியில் இருந்து கொண்டே கருணாநிதியை எதிர்த்து கருவின் குற்றம் என்று கவிதையே எழுதி விட்டார்.


Minimole P C
செப் 30, 2024 07:49

correct


சிவா அருவங்காடு
செப் 30, 2024 00:04

அதாவது நல்ல செயல்திறன் உள்ளவர்கள் இந்த ஆட்சியில் டம்மி பீஸ் என்று சொல்லி தொலைக்க வேண்டியதுதானே .


சிவா அருவங்காடு
செப் 30, 2024 00:04

அதாவது நல்ல செயல்திறன் உள்ளவர்கள் இந்த ஆட்சியில் டம்மி பீஸ் என்று சொல்லி தொலைக்க வேண்டியதுதானே .


Anantharaman Srinivasan
செப் 29, 2024 23:53

நீக்க பட்டதுக்கு காரணம் உதயநிதிக்கு உன்னை பிடிக்கல..


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 29, 2024 22:11

பதவிக் கொழுப்புல பால் கொழுப்பை திருடினீங்க. பால் ல தண்ணி கலந்து யாவாரம் செஞ்சிங்க. இப்போ கலந்த தண்ணிக்கு புள்ளி விவரம் சொல்றீங்க. ஆனா, எங்களுக்கு கிடைக்குற தகவல் வேற மாதிரியில்லா இருக்கு. து மு வோட அத்தைக்கு ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் ரொம்ப உதவி செஞ்சதாகவும் , சொல்லப்போனா அத்தைக்காக மேலிடத்துலேயே உளவு பார்த்ததாகவும் அதுநாலதான் சீட்டு கிழிஞ்சுதுன்னு தகவல் கசியுதே அண்ணாச்சி.


Rajendran Chockalingam
செப் 29, 2024 21:57

இவர் மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்தது இல்லை,தான் மகனுக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து விட்டார்.கனிமம் நாடகம் இத்துடன் முடிந்தது விட்டது.


Lion Drsekar
செப் 29, 2024 21:12

இதற்க்கு ஒரே காரணம் இவர் ஒரு நல்ல மனிதராக செயல்பட்டார் , நான் நேரில் கண்டு அனுபவித்ததை இங்கு பகிர்கிறேன், கிடக்கோ என்ற ஒரு அமைப்பில் கலைவாணர் அரங்கில் ஒரு மிகப்பெரிய விழா அதைக் காண வந்த வந்தவர் இந்த உண்மையான மனிதர், இவர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண மனிதராக , ஜாதி மத வெறி , மொழி வெறி இல்லாமல் , எல்லா ஸ்டால் களுக்கும் விஜயம் செய்து , ஒரு மனிதராக மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டு , எல்லோரது பாராட்டையும் பெற்றார், இதுதான் இவர் செய்த மிகப்பெரிய தவறு ,


Matt P
செப் 30, 2024 11:27

உண்மையான மனித திருடன் என்று சொல்ல வருகிறீர்களா?


புதிய வீடியோ