உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்'' , என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை கொளத்தூரில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை 41 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் 2.60 லட்சம் இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.உயர்கல்வியில் இடைநின்ற மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும், மத்திய அரசுப் பணிக்கு தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்விக்காக செய்வதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி என்ன இருக்கப் போகிறது.இந்த மருத்துவமனை வட சென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக இருக்கும். வட சென்னயை வளர்க்கும் நமது நடவடிக்கையில் இம்மருத்துவமனை ஒரு மைல் கல். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை கல்வியும், மருத்துவமனையும் நமது இரு கண்கள். கல்விக்கு கவனம் செலுத்துவதைப் போல், மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுத்த புதிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளுக்கு பணியாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள வ ரும்புவதுஇங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், சிகிச்சைக்கு வரும் மக்களை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்க வேண்டும். பரிவோடு சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையை சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அதேபோன்று பொதுமக்களுக்கு சுய ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதனை பின்பற்றி பொது இடங்களில் தூய்மையை பேணி பாதுகாக்க வேண்டும். கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:54

துணை முதல்வர் பதவிக்கு ஒரு மாற்றுத்திறனாளியை நியமிக்கலாமே. உங்கள் எம்எல்ஏக்களில் எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள்? ஊருக்கு உபதேசம்?


Mani . V
பிப் 28, 2025 05:40

உருட்டு, உன் வாய் நீ என்ன வேண்டுமானாலும் உருட்டலாம். அந்த நீட் தேர்வு ரத்து மாதிரிதானே இதுவும்?


RAMAKRISHNAN NATESAN
பிப் 27, 2025 23:12

தொலைகாட்சிகளில் பிளாஷ் நியூஸ் 4 வயது சிறுமி முதல்வருக்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன நான் Rs. 10000 ரூபாய் காசோலை தந்துள்ளார். அந்த குழந்தையின் தந்தை டாக்டர். பால கலைகோவன், கடலூர் கிழக்கு "தீமைக்கா" மருத்துவ அணி பொறுப்பாளர்.நுரையீரல் சிறப்பு மருத்துவர். கடலூரில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அவர் குடும்பமே திமுக அபிமானிகள். அவருடைய முகநூல் பக்கத்தில் தான் அனைத்து விவரங்களும் உள்ளன. கட்சியில் இருப்பவர் பணம் தந்து உள்ளார். விசாரித்ததில் அந்த குழந்தை படிப்பதும் ஒரு சிபிஎஸ்இ பள்ளிக்கூடம். அந்தக் குழந்தை பேசுவதை பள்ளியிலேயே வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல். LKG படிக்கும் குழந்தைக்கு மத்திய அரசு என்றால் புரியுமா. இல்லை 2000 கோடி ரூபாய் என்றால் புரியுமா. முதலில் பத்தாயிரம் ரூபாய் என்பதாவது புரியுமா ? உடனே பிரதமரே, இது தமிழகத்தின் குரல், உணர்வு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் சொல்கிறார்கள். பாழாய்ப்போன மொழி அரசியல் செய்ய பச்சிளம் குழந்தகளை கூட விட்டு வைக்கமாட்டார்கள். அதுவும் படித்த ?டாக்டர் தன் குழந்தையை எப்படி இவ்வாறு பயன்படுத்த விடலாம்? இது 1960 கள் அல்ல. இது 2025... எந்த சாயம் பூசினாலும், நாடகம் போட்டாலும், ஸ்டிக்கர் ஒட்டினாலும், உடனுக்குடன் வெளுத்து விடும்.


Uuu
பிப் 27, 2025 21:04

Dont require உள்ளாட்சி அமைப்பு ஒரு வேலையும் ஒழுங்கா நடக்கல