உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி

 குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி

சென்னை: டில்லியில், ஜனவரி மாதம் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டில்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முப்படைகளின் அணிவகுப்பும், மாநிலங்கள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. இதில், மாநில அரசுகளின் சாதனைகள், பாரம்பரியங்களை விளக்கும் வகையில், அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சுழற்சி முறையில் மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் ஜனவரி 26ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி உட்பட, 9 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 'பசுமை மின் சக்தி' என்ற தலைப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்