நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
'தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும், 'தமிழகத்திற்கு வர வேண்டிய, 973 கோடி ரூபாய் மானியத்தை வழங்க வேண்டும்; நெல்லை காய வைக்கும் இயந்திரங்களை, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க உதவி செய்ய வேண்டும். 'செறிவூட்டப் பட்ட அரிசியை கலப்பதற்காகன தரச்சான்றை, விரைவாக வழங்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளார்.