உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கெடு

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கெடு

சென்னை:''மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, தமிழக அரசை, அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கருப்பையா வலியுறுத்தினார். அவரது பேட்டி:மத்திய அரசு, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை, 2016ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து கேரளா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற, மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் இச்சட்டம், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. தற்போது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் பதவி உயர்விற்கான சட்டப்பிரிவை நடைமுறைப்படுத்த, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு ஆட்சியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை, முதல்வர் நடப்பு சட்டபை கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை