உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி ஆணையத்தை கண்டித்து தீர்மானம்

காவிரி ஆணையத்தை கண்டித்து தீர்மானம்

சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை கட்ட, கர்நாடகஅரசின் வரைவு திட்ட அறிக்கையை, மத்திய நீர்வள ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.இதுதொடர்பான, விவாதத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு அதிகாரிகள், எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், தமிழகம் ஒப்புக்கொண்டதாக, காவிரி மேலாண்மை ஆணையம் கூறி இருக்க முடியாது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் தவறை சுட்டிக்காட்டி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இனியும் காலம் தாழ்த்தினால், பெற்ற உரிமையை தி.மு.க., அரசு பறிகொடுக்க வேண்டியிருக்கும். - பி.ஆர்.பாண்டியன் ஒருங்கிணைப்பு குழு தலைவர்,அனைத்து விவசாயிகள் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ