உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணிப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணித்துள்ளது.நீட் தேர்விற்கு விலக்கு பெறுவது தொடர்பாக ஏப்ரல் 9ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன் படி, சென்னையில் இன்று (ஏப்ரல் 09) அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கக் கூடாது. நீட் தேர்வை தொடக்கம் முதலே தி.மு.க., எதிர்த்து வருகிறது. மருத்துவ துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. நீட் தேர்வு மாணவர்களின் உரிமையை பாதித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தினால் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புறக்கணிப்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ஜ., அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அதேநேரத்தில், கூட்டத்தில் பா.ம.க., சி.பி.எம். காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

தீர்மானம் நிறைவேற்றம்

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி தீர்மானத்தை வாசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.L.Narasimman
ஏப் 10, 2025 13:55

நாலறை வருசமா நல்ல கொறட்டை விட்டு தூங்கி இப்ப சட்ட போராட்டம் கிட்ட போராட்டம் நடத்த போறோமென்று கதை விடுவதை விட்டு உதயநிதியிடம் அந்த ரகசியத்தை கேட்டு நீட்டை ஒழிக்கவும்.


Raj
ஏப் 09, 2025 23:40

வெங்காயத்தை உரித்தால் என்ன கிடைக்கும் அது போலத்தான் நீட் தேர்வு தீர்மானம் நீர்த்துப்போகும். பிம்பிலிக்கி பிளாப்பி.


எஸ் எஸ்
ஏப் 09, 2025 20:44

பேரணி, கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஆறு மணி நேர உண்ணாவிரதம் இதெல்லாம் கருணாநிதி ஸ்டைல். எதற்கு எடுத்தாலும் அனைத்து கட்சி கூட்டம் இது ஸ்டாலின் ஸ்டைல்


R.MURALIKRISHNAN
ஏப் 09, 2025 20:43

ஏம்பா டக்ளஸ், இன்னும் உன்னை தமிழக மக்கள் நம்புவாங்கன்னு எதிர்பாக்கற? உன்னாலும் முடியாது, பொய் சொன்ன உன் மவனாலும் முடியாது. இந்த வருடம் உம் ஆட்சியின் இறுதி வருடம். பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல்,கனிமவள கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல் இவையனைத்தும் சேர்ந்தது தான் திமுக


Nagarajan S
ஏப் 09, 2025 19:55

திமுக அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் மக்களை ஏமாற்றுகிறது?


Ramesh Sargam
ஏப் 09, 2025 19:06

முதல்வருக்கு ஒரே ஒரு கேள்வி. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவப்படிப்பு முடித்து, மருத்துவர் ஆகும் ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்களா, ஒருவேளை உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால்...? ஒரு சிறு இருமல், தும்மல் என்றாலும் அப்பல்லோ போன்ற பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளைத்தானே நீங்கள் விரும்பி செல்கிறீர்கள். அங்குள்ள மருத்துவர்கள் இந்த நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவர்கள் ஆனார்கள் என்று நீங்கள் யோசித்தீர்களா?


Kanakala Subbudu
ஏப் 09, 2025 18:52

இன்னும் எவ்வளவு காலம் நீட்டை வைத்து அரசியல் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. உச்ச்நீதி மன்றம் சென்று ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது


ராம் சென்னை
ஏப் 09, 2025 18:23

வெத்து தீர்மானம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை