மேலும் செய்திகள்
மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் திட்டம் தொடருமா?
21-Aug-2025
சென்னை,:'எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் நடந்த, 'தீஷா' கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, அரசு திட்டங்களை கண்காணிக்க, 'தீஷா' எனப்படும், 'மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற் றும் கண்காணிப்பு குழு' அமைக்கப்பட்டு உள்ளது. அக்கறை இக்குழுவின் ஐந்தாவது கூட்டம், தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல்வம், கீதா ஜீவன், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, திருமாவளவன், சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில், அக்கறையோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு 37,000 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. கடந்த 3ம் தேதி வரை, சுய உதவி குழுக்களுக்கு 13,062 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எம்.பி.,க்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2021 முதல் 1,274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இத்திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 12,045 பணிகளில், 9,755 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. ரூ.702 கோடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டிற்கு தலா 3 கோடி ரூபாய் வீதம் 234 தொகுதிகளுக்கு 702 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் படுகிறது. மாநில அரசு, எம்.எல்.ஏ.,க்களுக்கு 3 கோடி ரூபாய் வழங்குவதால், மத்திய அரசு எம்.பி., தொகுதி நிதியை 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
21-Aug-2025