உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

கோவை: துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியா அரங்கில் தொழில் துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சி.பி.ராதா கிருஷ்ணன் பேசியதாவது: எனது பொது வாழ்க்கையை நான் கோவையில்தான் தொடங்கினேன். இதை கூறுவதில் பெருமை கொள்கிறேன். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும். விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u4wgeav7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரே நேரத்தில் முன்று மாநிலங்களுக்கு கவர்னராக பணியாற்றினேன். தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநில கவர்னராக பணியாற்றினேன். தற்போது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளேன். முயற்சி நம்முடையது. முடிவு இறைவனுடையது என்றுதான் நான் பார்க்கிறேன். இந்த துணை ஜனாதிபதி என்பது எனக்கு கிடைத்த ஒரு மகத்தான மரியாதையாக நான் பார்க்கவில்லை. துணை ஜனாதிபதி பதவி எனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை அல்ல. உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், நம் கொங்கு மண்ணுக்கும், கோவை மாநகரத்திற்கும், கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். கோவை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவுவேன். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக, கோவை விமான நிலையத்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''உலகம் எங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும், இந்த தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள்'', என்றார்.

பாதுகாப்பு குறைபாடு!

கோவை டவுன் ஹாலில் காந்தி சிலைக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் மீறி, பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் வேகமாக கூட்டத்திற்குள் புகுந்து, பிறகு தப்பி சென்றனர். அந்த வாலிபர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. துணை ஜனாதிபதி வருகையின் போது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து பாஜவினர் கோஷம் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். இதனால் டவுன்ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
அக் 29, 2025 08:40

இன்னொரு தமிழனுக்கு கிடைத்திருந்தால் இவர் இப்பிடி பேசவே மாட்டாரு.


ராஜா
அக் 29, 2025 04:16

அய்யா அப்துல்கலாம் அவர்களின் எளிமை மற்றும் அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது என்று தோன்றுகிறது


மணிமுருகன்
அக் 28, 2025 23:03

வண்டி எண்ணை வைத்து கண்டுப்பிடிக்க முடியாதளவாயிற்றா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி காவல்துறை என்ற ஏவல்துறை


பேசும் தமிழன்
அக் 28, 2025 20:13

உண்மை தான் அய்யா.... ஆனால் இங்கே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அநேக எம்பி க்க‌ள்.... தமிழருக்கு ஓட்டு போடவில்லையே..... அப்படி ஓட்டு போடாத திராவிடர்களுக்கு..... வரும் தேர்தலில் தமிழர்கள் ஓட்டு கண்டிப்பாக இல்லை!!!


Natchimuthu Chithiraisamy
அக் 28, 2025 17:50

என்னுடைய பங்காளி துணை ஜனாதிபதி என்பதில் நான் தான் பெருமை கொள்ள முடியும். நம்ம குலதெய்வ கோவிலுக்கு வாருங்கள். முத்தூர் மு பெ சாமிநாதன் அவர்களை கோவிலை நன்றாக பராமரிக்க சொல்லுங்கள்.


RAMESH KUMAR R V
அக் 28, 2025 17:23

நமது நாட்டின் துணை ஜனாதிபதி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.


Venugopal S
அக் 28, 2025 17:02

ஒரு வெற்றுவேட்டு பதவிக்கே இத்தனை ஆர்ப்பாட்டமா, என்னவோ பெரிய பிரதமர் பதவியையே பாஜக இவருக்கு தூக்கி கொடுத்து விட்டது போல்?


பேசும் தமிழன்
அக் 28, 2025 20:18

அப்போ எதுக்கு உங்கள் இண்டி கூட்டணி ஆந்திரா ரெட்டியை வேட்பாளராக அறிவித்து..... தமிழக MP க்கள் அத்தனை பேரும் மாங்கு மாங்கு வர என்று ஓட்டு போட்டார்கள்..... அவர்கள் என்ன பிரதமர் பதவிக்கா ஓட்டு போட்டார்கள் ???


vivek
அக் 28, 2025 22:09

அதுக்கு கூட ஒட்டு போட திமுகவிற்கு திராணி இல்லையே


என்றும் இந்தியன்
அக் 28, 2025 16:36

துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை???திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகத்திற்கு போட்ட வெடிகுண்டா இது??? திமுக தான் இவருக்கு ஒட்டு போடவில்லையே???


Oviya Vijay
அக் 28, 2025 15:48

. இவரிடம் சமீபத்தில் ஒரு நிருபர் நடிகர் கமலைப் பற்றிக் கேட்க முயல, கமலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா என்று பதிலளித்திருந்தார்... ஏதோ வானளாவிய சாதனைகள் இவர் புரிந்து விட்டது போன்ற இறுமாப்பு இவரது மனதிற்குள்... தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் இவரை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை...


vivek
அக் 28, 2025 22:09

ஓவியமே...இதயம் பத்திரம்


vivek
அக் 28, 2025 22:11

இவருக்கு எதிராக ஒட்டு போட்ட திமுக படுதோல்வி அடைந்து இவர் வெற்றி பெற்றார்.என்பது உண்மை


திகழ்ஓவியன்
அக் 28, 2025 14:08

அண்ணாமலை கொடுத்த வாழ்வு , அவர் கோவையில் நிற்க வேண்டி அங்குள்ள உமக்கு கோவெர்னெர் பதவி கொடுத்து நகத்தியதா ல் அடுத்து தமிழ் மக்கள் வோட்டுக்கு குறி வைத்து உங்களுக்கு இந்த பதவி ஆகவே நீங்கள் நன்றி என்றால் அண்ணாமலை கு தான் சொல்லணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை