மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் எதிர்ப்பால் சுற்றறிக்கை வாபஸ்
12-Dec-2024
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த, 6ல் தொடங்கிய முதல் திருப்புதல் தேர்வு வரும், 24 வரை நடக்கிறது.10ம் வகுப்புக்கு, முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த, 6ல் தொடங்கி வரும், 21 வரை நடக்கிறது. ஆனால் வரும், 13ல் போகி பண்டிகையன்று, மாணவ - மாணவியருக்கு திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. அத்தேர்வை, வேறு நாளுக்கு மாற்ற, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், ''வரும், 13ல் நடக்கவிருந்த தேர்வு, 25க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது,'' என்றார்.
12-Dec-2024