மேலும் செய்திகள்
ரூ.20 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவு தம்பதி கைது
02-Jul-2025
சென்னை:தனியார் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக, 50 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நிசார் அகமது. 2014ல் தன் மகளுக்கு, தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட் வாங்க முயற்சி செய்தார். இதை அறிந்து, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்வகுமார், 40, நிசார் அகமதுவிடம், 'சென்னை அண்ணா நகரில் வசித்து வரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான என் நண்பர் மோகன்ராஜ், போக்குவரத்து துறை துணை செயலராக உள்ளார்.அவரது செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கித் தருகிறேன்' எனக் கூறியுள்ளார்.இது தொடர்பாக நிசார் அகமதுவை, மோகன்ராஜிடம் அழைத்து சென்று, 50 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்து, சீட் வாங்கி தராமல் பண மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, 2015ம் ஆண்டு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நிசார் அகமது புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணை முடிவில், ஓய்வு பெற்ற அதிகாரியான மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, மோகன்ராஜ் தனது வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரிந்திருந்தும், தலா, 25 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு காசோலைகளை, நிசார் அகமதுவிடம் கொடுத்து ஏமாற்றியதும், அதற்கு செல்வகுமார் உடந்தையாக இருந்ததும், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, மோகன்ராஜ் மற்றும் செல்வகுமாருக்கு, நீதிமன்றம் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.அத்துடன், மோசடி தொகையான, 50 லட்சம் ரூபாயை மோகன்ராஜ் செலுத்த வேண்டும். தவறினால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
02-Jul-2025