உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதலிடம்

5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்சஒழிப்பு போலீசாரின் புள்ளிவிபரப்படி அரசுப்பணி செய்ய லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதல் 2 இடங்களில் உள்ளன.

வருவாய்த்துறை

'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஆனால் அதே அலுவலகங்களில் உயர்அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி வருகின்றனர். லஞ்சப்பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில் 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக கிளார்க் முதல் கிராம பஞ்., உதவியாளர் வரை 32 பேர் கைதாகி உள்ளனர். 4வது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது. நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர், உதவியாளர் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரில் 3 பேர் கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Agro Forest
செப் 10, 2025 20:45

உண்மைகளை சொல்வதில் தவறில்லை


K Annadurai
செப் 10, 2025 16:44

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கின்றது, அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் இருவரும் கூட்டாகவும், தனியாகவும் ஊழல் சர்வ சாதாரணமாக நடக்கின்றது,


MARUTHU PANDIAR
செப் 10, 2025 13:09

அது ஒரு டாப் -டு- பாட்டம் நெட் ஒர் க்குங்கோ. வயசு 58ங்கோ. ஆனால் டமில் நாட்டுல மட்டும் ரிட்டியர்மெண்டு என்பதெல்லாம் அதுக்கு கெடியவே கெடியாதுங்கோ. செழிச்சிக்கிட்டே கொழிச்சுக்கிட்டே இருக்குமுங்கோ. டாப் டு பாட்டம் நெட் ஒர்க்குங்கோ. டாப் டு பாட்டம்.


Gajageswari
செப் 10, 2025 12:55

சிக்கியவர்கள் முதலிடம்,


Saai Sundharamurthy AVK
செப் 10, 2025 10:57

லஞ்சம் வாங்குவதில் திமுக ஆளும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பது கேவலமாக உள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எல்லாம் திமுகவின் ஊழியர்களாக மாற்றப்பட்டு விட்டனர்.


Saai Sundharamurthy AVK
செப் 10, 2025 10:50

லஞ்சப் பேர்வழிகளின் புகலிடமாக தமிழ்நாடு மாறியிருப்பது வருத்ததிற்குரிய விசயம்.


baskar p
செப் 10, 2025 10:20

போட்டி போட்டு வாங்குங்க லஞ்சம். ஏற்கனவே அரசாங்கம் வரி வரினு புடுங்குது. மிச்சத்தை நீங்க புடுங்கீருங்க.. லஞ்சம் வாங்குற ஒருத்தனும் நல்லாவே இருக்க மாட்டானுங்க.. அவங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது.. எல்லாத்தும் லஞ்சம் லஞ்சம்னு வாங்கி என்ன பன்ன போறீங்க..


raja raj
செப் 10, 2025 10:18

ஆர்டிஓ ஆபீஸ்ல அதிகமா லஞ்சம் வாங்குறாங்க அத பத்தி சொல்லலியே இதுல லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பங்கு இருக்குமா இதனால கூடவும் ஆர்டிஓ ஆபீஸ்ல நடக்குற ஊழல் பற்றி லஞ்ச ஊழல் பற்றி யாரும் பேச மாட்டாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிக லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதைப் பற்றி கொஞ்சம் எடுத்து போடுங்க


pmsamy
செப் 10, 2025 08:16

வருவாய்த்துறை ஒன்றிய அரசின் கீழ் வேலை செய்கிறது. நேரடியாக சொல்லப்போனால் பாஜக ஊழல் செய்திருக்கிறது.


Natarajan Ramanathan
செப் 10, 2025 07:13

ஒருவன் கையில் நூறு ரூபாயுடன் மிக உயர்தர அசைவ உணவகத்தில் நுழைந்து இஷ்டப்பட்டதை எல்லாம் தின்று தீர்த்தான். இறுதியில் பணம் இல்லை என்று தெரிந்தவுடன் போலீசில் பிடித்து கொடுத்தார்கள். அவன் தன்னிடம் இருந்த நூறு ரூபாயை அந்த போலீசுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு சந்தோஷமாக சென்று விட்டான்.


MARUTHU PANDIAR
செப் 10, 2025 15:57

இது டாப்பு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை