சாலை பாதுகாப்பு நிதி ரூ.130 கோடியாக உயர்வு
சட்டசபையில் நேற்று, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு போக்குவரத்துக் கழகங்களின், 50 பஸ் பணிமனைகள், 75 கோடியில் ரூபாயில் புதுப்பிக்கப்படும். 4,000 பஸ்களில், 15 கோடி ரூபாய் செலவில், 360 டிகிரி வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 500 பஸ்களில் இரண்டு கோடி ரூபாயில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்சென்னையில் அயனாவரம், முகப்பேர், எம்.எம்.டி.ஏ., காலனி, திருவேற்காடு, பெசன்ட் நகர், கண்ணகி நகர் ஆகிய ஆறு பஸ் முனையங்கள், 7.5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்நுாறு பணிமனைகளில் பஸ்களை சுத்தம் செய்யத் தேவையான நவீன இயந்திரங்கள், கருவிகள், 10 கோடி ரூபாயில் வாங்கப்படும்ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய கட்டடம், 7.27 கோடி ரூபாயில் கட்டப்படும் திறன்மிகு ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில், சேலம் தேவண்ணகவுண்டனுாரில், 17.25 கோடி ரூபாயில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும்தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடக்கும், 100 இடங்களை கண்டறிந்து, அங்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்சாலை விபத்துகளை தடுப்பதற்காக, 2025 - 26ம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு நிதி, 65 கோடி ரூபாயில் இருந்து, 130 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.