உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவொற்றியூர்:எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் - நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து சிரமம் ஏற்பட்டதுஎண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் பலத்த காற்று வீசி, மணல் சுழன்றடித்ததால், ஸ்கூட்டர், பைக், இலகுரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியில், தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கியிருக்கும், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தவிப்பிற்குள்ளாகினர்பகிங்ஹாம் கால்வாயில், இயல்பை காட்டிலும், 5அடி உயரத்திற்கு மழைநீர் ஆர்பரித்து செல்வதால், 4, 6, 7 ஆகிய வார்டுகளில், இணைப்பு கால்வாய்களின் மதகுகள் அடைக்கப்பட்டு, ராட்சத மின்மோட்டார்கள் வழியாக, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏழாவது வார்டின், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் பகுதிகளில், 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதுமணலிபுதுநகர், இடையஞ்சாவடியில், காற்றில் மின்வயர் அறுந்து விழுந்ததில், சுரேஷ்குமார், என்பவருக்கு சொந்தமான எருமைமாடு ஒன்று பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 01, 2024 08:59

இதெல்லாம் ஒரு காகத்தில் நீர்வழித் தடமா இருந்திருக்கும். இன்னிக்கி ஆக்ரமிச்சு ஊடு கட்டியாச்சு. ஊட்டுல டி.வி, ஏசி, ஃப்ரிட்ஜ் இருக்கும். கிணறு இருக்காது. அதை மூடி பூஜா ரூமோ, டாய்லட்டோ கட்டியிருப்பாங்க


raja
டிச 01, 2024 08:57

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாமல் நாலாயிரம் கோடியை ஆட்டையை போட்டு சென்னை மாநகரத்தில் பல நீச்சல் குளங்கள் உலக தரம் வாய்ந்த விடியல் துறைமுகம் கட்டிய கோவால் புற மாடல் அரசு..


முக்கிய வீடியோ