உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்

பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்

புதுடில்லி:காந்தி நகரில், இரண்டு கொள்ளையரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து, 60,000 ரூபாய் பணம் மீட்கப்பட்டது.புதுடில்லி காந்திநகர் அசோக் காலியில், ஷாஜத் என்பவர், 18ம் தேதி இரவு 10.00 மணிக்கு சென்றார். அவரை ஒருவர் வழிமறித்தார். மற்றொருவர் ஷாஜத்தை கீழே தள்ளினார். இன்னொருவர், ஷாஜத் பையில் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறித்தார்.ஷாஜத் அலறல் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். உடனே, கொள்ளையர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், விரட்டிச் சென்று இரண்டு கொள்ளையரைப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடினார்.தகவல் அறிந்து வந்த காந்திநகர் போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த கொள்ளையர் விக்கி,21, மற்றும் சுமித் என்ற காண்டே,28, ஆகிய இருவரையும் கைது செய்து, இருவரிடம் இருந்தும் 60,000 ரூபாய் பணத்தை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்தது. தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !