உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையை சேர்ந்தவர் உருவாக்கிய ராக்கெட் நிறுவனத்தின் அபார வளர்ச்சி : மதிப்பு ரூ.800 கோடி ஆனது

சென்னையை சேர்ந்தவர் உருவாக்கிய ராக்கெட் நிறுவனத்தின் அபார வளர்ச்சி : மதிப்பு ரூ.800 கோடி ஆனது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் 2021 ல் உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.800 கோடி ஆக அதிகரித்துள்ளது.சென்னையை சேர்ந்த டிராக்டர் டிரைவரின் மகன் ஆனந்த் மேகலிங்கம். இவரது தாயார் குடும்ப தலைவி. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் படிப்பை துவக்கினார். ஆனந்த்க்கு இருந்த விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக அவருக்கு நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம் அவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்தார்.இதன் பிறகு 2021ல் பட்ட மேற்படிப்பின் போது ‛ ஸ்பேஸ் ஜோன் இண்டியா' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினார். அதில், அவரது தந்தையை பங்குதாரர் ஆக்கினார்.இந்த நிறுவனம் ஆனது, நவீன விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மாணவர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். புதுமையான உந்துவிசை அமைப்புகள், திட மற்றும் திரவ உந்துவிசை ஆகியன மூலம் ராக்கெட் ஏவுவதற்கான செலவை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற இந்த நிறுவனம் தீவிரமாக பணியாற்றியது.2023 ல் இந்தியாவின் முதலாவது ஹைப்ரிட் ராக்கெட்டை சென்னையில் இருந்து ஸ்பேஸ் ஜோன் இந்தியா வெற்றிகரமாக ஏவியது. விண்வெளி தொழில்நுட்பத்தை அனைவருக்கும் ஏற்றதாகவும், உகந்ததாகவும் மாற்றுவதே தங்களது நிறுவனத்தின் நோக்கம் என்கிறார் ஆனந்த் மேகலிங்கம். இதற்காக ராக்கெட் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது, கல்வி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நோக்கமாக வைத்து செயல்படுகிறார்.ஸ்பேஸ் ஜோன் நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீட்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு பிரதமர் மோடி மற்றும் முக்கிய நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.800 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subramanian
ஜூலை 09, 2024 07:20

வாழ்த்துகள்


தமிழ்வேள்
ஜூலை 08, 2024 21:15

இந்த கம்பெனியை யும் மருமவன் மிரட்டி பிடுங்காமல் இருக்க வேண்டும்.... ராக்கெட்டில் வைத்து பவுடர் யாவாரம் பார்க்க முடியுமா என்று சின்னது யோசிக்குது-ன்னு ஒரு பேச்சு ஓடுகிறதாமே....அப்படியா?


Murali Krishnan
ஜூலை 08, 2024 20:27

வாழ்த்துக்கள், தங்களின் சாதனைகளை தொடர இறைவனை வேண்டுகிறேன். கலாமின் கனவு காணுங்கள் என்ற கூற்றிற்கு தங்களது வளர்ச்சி பாரட்டக்கூடியது. தங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நிறுவனத்தாருக்கும் வாழ்த்துக்கள்.....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 08, 2024 20:06

ஈரவெங்காயம் மட்டும் இல்லன்னா இவரால் இப்படி வளர்ந்திருக்க முடியுமா திராவிட ஊ பீயி பெருமிதம் .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 08, 2024 20:05

நம்ம திராவிடகும்பலு எஜமான்ஸ் நடத்தும் பிஸினஸுக்கு போட்டியா வந்துருவாரோ ? ஒரு ஊ பீயி ன் ஆதங்கம் ........


Ramsrinivassn brothers
ஜூலை 08, 2024 19:47

கனவுகணுங்கள் என்று இளைஞ்ஞர்களுக்கு அறிவுரை கூறிமறைந்த திரு.அப்துல்கலாம் ஐயாவின் பெயரையும் புகழையும் பறைசாற்றும்வகையில் செயலாற்றும் இளைஞ்சரே தங்கள் முற்சிகள் யாவும் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.


RAMESH KUMAR R V
ஜூலை 08, 2024 19:08

Congratss


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 08, 2024 18:39

இதுவல்லவா சாதனை.


வாய்மையே வெல்லும்
ஜூலை 08, 2024 18:30

உமா மஹேஸ்வரி சமேத மகாலிங்க ஸ்வாமியே உங்களுக்கு பரிபூரண ஆயிசும் மேலும் மேலும் முன்னேற வழிகாட்டுதலும் நடக்க பிரார்த்தனைகள் பல பல .


SRI SIVASELVI Building material
ஜூலை 08, 2024 18:12

வாழ்த்துகள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை