உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியில் பங்கு; அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் வரவேற்பு: செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு; அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் வரவேற்பு: செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும். ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு என்கிற முடிவை வரவேற்கிறோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த, வரும் 5ம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் துவங்குகின்றன; டிச., 15க்குள் முடியும். அதைத் தொடர்ந்து, 'கிராம தரிசனம்' என்ற பெயரில், கிராமங்கள் நோக்கி செல்கிறோம். எங்கள் தலைவர்கள் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவர். கட்சி வலிமையாக இருந்து, கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான், பிற கட்சிகள் எங்களை தேடி வரும்.தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவு எடுக்க வேண்டியது டில்லி மேலிடம் தான். இப்போது, 'இண்டியா' கூட்டணியில் இருக்கிறோம். கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி அமைக்க, சோனியா பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார். இப்போது, தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். விஜய்யின் அரசியல் வருகை, 'இண்டியா' கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் என்பதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும். கூட்டணியில் எந்த சலனமும் சங்கடமும் இல்லை. தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால், நாட்டில் புரட்சி ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:21

பார்த்து பக்குவமா பேசுங்க , செந்தில் விஜய் கட்சிக்கு போயிட்டா உதவி CM ஆயிடுவாரு , அப்புறம் உங்களோட லண்டன் கல்லூரிக்கு தான் நீங்க CM ஆக முடியும்.


Rpalnivelu
நவ 02, 2024 20:56

ஒரு சாதாரண வங்கி கிளார்க்காக வேலை செஞ்சி, பல கோல்மாலைகளை செஞ்சி, ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கி, லண்டனில் ஒரு பெரிய மாளிகை வாங்கியது எப்படி என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியபோது அவர் மீது அவமதிப்பு வழக்கு போடுவேன் என்று எகிறினீர்களே! அந்த விவகாரம் என்ன ஆனது? ஐ டீ மற்றும் ஈ டி இந்த கேஸை கையிலெடுத்ததா? அண்ணாமலை இந்த கேசில் ஆர்வம் காட்டினாரேஅவர் போன பின்பு தமிழகம் பஜாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதே, ஏனோ?


R K Raman
நவ 02, 2024 14:37

திமுக மைனாரிட்டியாக இருந்த போது இவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. இனிமேல் ஒன்றும் வாய்ப்பு இல்லை... இப்போது கூட ஒரு வாரியம் கூட இல்லை.


karupanasamy
நவ 02, 2024 13:51

அடுத்த தலைவர் பதவியை புடிக்க எல்லோரும் டில்லிக்கு ஓடவெச்சிட்டியே ர வு டி செல்வம்.


Suppan
நவ 02, 2024 13:31

இந்திரா காலத்திலேயே பாராளுமன்றம் எங்களுக்கு மாநில சட்டசபை உங்களுக்கு என்று தீர்மானம் போட்டாயிற்று. இப்போ கூவி என்ன பயன் செல்வப்பெருந்தகை அய்யா .


Narasimhan
நவ 02, 2024 13:26

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக இருந்து விட்டு இன்று ஒவ்வொரு மாநில கட்சியுடனும் பிச்சை கேட்டு சீட் கேட்கவேண்டியுள்ளது. பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது. முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ராஜ்ய சபாவில் சோனியா காந்தி பாஜபாவை பார்த்து நகைத்தார். அப்போது வாஜ்பாய் காலம் வரும் போது மக்கள் உங்கள் கட்சியை எப்படி ஏளனம் செய்கிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள் என்கிறார். தீர்க்கதரிசி


duruvasar
நவ 02, 2024 11:56

உங்க மூத்த தலைவர் இளங்கோவன் வந்தால் , குடுக்குற பஞ்ச் உன் உடம்பில் எங்க விழும் என்பது யாருக்கும் தெரியாது.


ஆரூர் ரங்
நவ 02, 2024 11:28

1980 திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்த போது காங்கிரஸ் 110 தொகுதியிலும் திமுக அதற்கும் குறைவான இடங்களிலும் போட்டியிட்டன. இப்போ எம்எல்ஏ சீட்டுக்காக கெஞ்சும் நிலை. இப்போ அதிகாரத்தில் பங்கு கேட்டால் கெட் அவுட் தான். பீட்டர் அல்போன்ஸ் தான் திமுக ஆட்சியே காமராசர் ஆட்சிதான் என்கிறார். காமெடிக்கு குறைவில்லை.


raja
நவ 02, 2024 11:13

அறிவாலய அடிமைகளுக்கு இம்ம்புட்டு வீரமா...கூடாதய்யா கூடாது...அப்புறம் தலைவர் பதவியை இழக்க வேண்டிவரும்....


Subramanian Marappan
நவ 02, 2024 09:53

இந்த ஆளுக்கு தமிழ்நாட்டில் சிண்டிகேட் இண்டிகேட் என்று காங்கிரஸ் இரு பிரிவாக இருந்தன என்பது பற்றி ஏதாவது புரிதல் இருக்குமா?


சமீபத்திய செய்தி