உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறுப்பு அரசியலுக்கு வேர் திராவிட இயக்கங்கள்: ராஜா

வெறுப்பு அரசியலுக்கு வேர் திராவிட இயக்கங்கள்: ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “திராவிட கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் கிடையாது. வெறுப்பு அரசியலுக்கு வேர், திராவிட இயக்கங்கள் தான்,” என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.அவர் அளித்த பேட்டி: உலகமே வியக்கும் வகையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஹிந்து மக்களையும், நம் பாரத நாட்டையும் நேசிக்கக்கூடிய ஒருவர். அவர் மீண்டும் வென்று வந்துள்ளதால், இந்திய- - அமெரிக்க உறவு மட்டுமின்றி, வர்த்தகமும் பெருகும்.மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள். இவர்களை போன்றவர்களை, அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும்.திராவிட கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் கிடையாது; இவர்கள் ஜாதி, மொழி வெறியர்கள். வெறுப்பு அரசியலுக்கு வேர் திராவிட இயக்கங்கள் தான். ஜாதி வெறுப்பு, மொழி வெறுப்பு, தேச வெறுப்பு திராவிடத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழ்வேள்
நவ 08, 2024 15:44

வெறுப்பு அரசியல் செய்யவில்லை என்றால் திராவிடத்துக்கு வாழ்வே இல்லை -என்பது நன்கு தெரிந்த காரணத்தால் இந்த வரைமுறை அற்ற வெறுப்பு அரசியல் ...தாங்கள் பூரியர் [ஒழுங்கு ,நேர்மை அற்ற பிறவிகள் - திருவள்ளுவர் ]என்பதால் , ஒழுங்காக நேர்மையாக இருப்பவர்கள் அனைவரையும் ஆரியர் [நேர்மை ஒழுக்கம் கவுரவம் கொண்டவர்கள் ] என்று பெயர் சூட்டி கேவலப்படுத்துவதாக நினைத்து தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள் .......


Uuu
நவ 08, 2024 14:39

ராஜா சொல்வது 100% உண்மை. டிராவிடத்துக்கு பரிந்து பேசும் மானம் கெட்ட மக்கள் அல்ல மாக்கள்


pmsamy
நவ 08, 2024 10:18

மனநலம் பாதிக்கப்பட்டவர் பாவம்


Sampath Kumar
நவ 08, 2024 08:14

வேறு ட்ராவிடமாக இருக்கலாம் அனால் விதை ஆர்யா உங்கள் கும்பல் தான் என்பதை மறக்க மறுக்க முடியுமா ???


vadivelu
நவ 08, 2024 08:52

ஒரு உதாரணம் சொல். ஆரியர்கள் என்பவர்கள் யார்? சென்னையில் இருப்பவர்கள் எல்லோருமே வந்தேறிகள்தான். யாரை பார்த்தும் ஆரியன், தெலுங்கன், வட நாட்டான் என்று உள்ள உங்களுக்கு அருகதை இல்லை. 1947 ல் தமிழ நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் கீழ். பரந்த நிலங்களும், விவசாயமும் நிறைந்தது இருந்தது. மக்கள் நிம்மதியாக அவரவர் தொழுலை பார்த்து வாழை நடத்தினர். ஆங்கிலேயன் செய்த சூழ்ச்சியில் விழுந்த சில அற்பர்கள் மக்களை சாதியால் பிரித்தனர். இது சரித்திரம், உண்மை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று உலகம் முழுதும் அன்றும், இன்றும் இருப்பதுதான்.


J.Isaac
நவ 08, 2024 17:40

குருகுல கல்வி என்று தாங்கள் மற்றும் கற்று கொண்டு மற்ற இன மக்களுக்கு கல்வியை கொடுக்காமல் அடிமைகளாக வைத்து ஆதிக்கம் செலுத்திய ஆரியர்களிடம் இருந்து, ஆங்கிலேயர் வந்து அழிந்து போகிற பணத்தை கொள்ளை அடித்து ,என்றும் அழியாத கல்வியை கொடுத்து விழிப்புணர்வு உண்டாக்கி நாட்டில் கெளரவமாக வாழ வழி செய்தார்கள்.


சி.முருகன்.
நவ 08, 2024 06:18

போடா


Kasimani Baskaran
நவ 08, 2024 05:40

திராவிட வியாபாரத்தின் அடிப்படையே வேறு பிராண்ட்கள் மீதான வெறுப்பில்தான் ஆரம்பமானது. தீக்காவை வெறுத்த தீமுக்கா - ஆனால் அவர்களின் கொள்கைகளையும் ஓட்டுக்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள். தீமூக்காவை வெறுத்த ஆதிமூக்கா. ஆனாலும் பங்காளிகளாக ஏற்றுக்கொள்வார்கள். நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கு இந்த திராவிட சூத்திரம் புரியவேயில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை