உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் ரோப் கார் சேவை துவங்கியது

பழநியில் ரோப் கார் சேவை துவங்கியது

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. முருகன் கோயில் சென்று வர படிப் பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் மலை கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன் படுகிறது. வருடாந்திர பராமரிப்புக்காக ஜூலை 15 லிருந்து ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு 36 நாட்களாக பணிகள் நடந்தன. இதையடுத்து எடைக்கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடந்த நிலையில் பொறியாளர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்கான அனு மதியளிக்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் நடந்து ரோப் கார் சேவை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ