உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

கடலுார்: கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விஜய் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடையவர். இவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rqsiyma9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடலூரில் பதுங்கி இருந்த ரவுடி விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்ற போது அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.கடந்த சில தினங்களாக, குற்றச்சம்பவங்களை தடுக்க என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த கால சில சம்பவங்கள் பின்வருமாறு;* சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.* தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.* மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

சிட்டுக்குருவி
ஏப் 03, 2025 05:09

குற்றவியல் சட்டங்கள் குற்றங்களை தடுப்பதாகவும் ,மக்கள் குற்றங்களினால் பாதிக்கப்படுவதை தடுப்பதாகவும் இருக்கவேண்டும். ஒருவன் ஏற்கனவே 30 குற்றங்களில் குற்றம் பதியப்பட்டு மேலும் குற்றங்கல் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக திறிகின்றான் என்றால் சட்டங்கள் சரி இல்லாததயே காட்டுகின்றது. ஆட்சியாளர்கள் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை .சரியான சட்டங்கள் இருந்திருந்தால் போலீசும் இந்தமாதிரியான ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள்.மக்களை பாதுகாப்பவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை .உடனே அரசு குற்றவிழல் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். ஒரு குற்றவாளிக்கு முதல் குற்றத்திற்கு மட்டுமே ஜாமீன் வழங்கவேண்டும் .இரண்டாவது குற்றம் செய்தால் அந்த வழக்குகள் முடியும்வரை ஜெயிலில் அடைக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்களும் குறையும் ,மக்களுக்கும்,குற்றவாளிக்குமே பாதுகாப்பு. காவல்துறைக்கும் குற்றங்களை தடுப்பது சுலபமே .செய்வீர்களா ?ஒவ்வொரு தொகுதி மக்களும் அவர்கள் தொகுதி சட்டமன்ற பிரதிநிதிகளை அவ்வாறு சட்டம் இயற்ற வற்புறுத்தவேண்டும் .


Srinivasan Ramabhadran
ஏப் 02, 2025 21:17

மணிப்பூர் நிகழ்வுகளுக்கு மற்றும் அஇஅதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுக்கு பொங்கி கொதித்து எழுந்த நம் ஊர் மனித உரிமை ஆர்வலர்களும் இப்போதைய ஆளும் கட்சியினர்களும் எங்கே காணாமல் போய் விட்டார்கள்.


Nandakumar Naidu.
ஏப் 02, 2025 19:40

அரசியல் பிண்ணனி உள்ள ரவுடிகளை என்ன செய்வதாக உத்தேசம் திரு. காவல் துறை அவர்களே? அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளியை எப்போது என்கவுண்டர் செய்வீர்கள்?


Jude Jerald
ஏப் 02, 2025 19:33

உன்ன முதல என்கவுண்டர் பண்ணனும்


V Venkatachalam
ஏப் 02, 2025 19:03

இன்னா இது? புதுசா இருக்கே..நம்ம தமிழ் நாட்டு போலீஸ் ரவுடியை சுட்டுடிச்சா? அதுவும் சுட்டு கொன்னுடிச்சா? கட்டு மரம் வளர்த்து விட்ட ரௌடிகளை சுட எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? நம்பிட்டேன்..


rajasekaran
ஏப் 02, 2025 18:57

திமுக ஆட்சி யாளர்கள் utterpradesh இல் என்கவுண்டர் நடந்தபோது சேரை ஊற்றினார்கள் . தற்போது அதே வேலையை இவர்கள் செய்கிறார்கள்.


Ramesh Sargam
ஏப் 02, 2025 18:02

குற்றம் செய்தவர்களை போட்டுத்தள்ளுங்க. ஆனால் அரசியல் வெறுப்பில் எதிர்கட்சியினரை போட்டுத்தள்ளாதீங்க.


Haja Kuthubdeen
ஏப் 02, 2025 17:58

நல்ல விசயம்தான்....கோர்டு கேசுன்னு இழுத்தடிக்காம முடுச்சு விடனும்...


Balamurugan Sangilimuthu
ஏப் 02, 2025 17:03

big salute to TN Police and TN CM


Venkatesan Ramasamay
ஏப் 02, 2025 16:56

என் கவுண்டர் வரவேற்கத்தக்கது.. salute போலீஸ் துறைக்கு.. ரவுடிகளின் எண்ணிக்கை குறையும்.. பயம் வரும்.. குற்றம் குறையும்.. மீண்டும் ஒருமுறை salute போலீஸ் துறைக்கு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை