உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த, கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zt7o54ud&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அவருக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். நாகேந்திரன் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VRM
அக் 09, 2025 13:36

இவர் மேல் ஐந்து கொலைவழக்குகள் நிலுவையில் இருந்துச்சாம். .


ponssasi
அக் 09, 2025 12:28

நமது நீதித்துறை தீர்ப்பு கொடுப்பதற்குள் கடவுள் தீர்ப்பு கொடுத்துவிட்டார். நீதிமன்றங்கள் இன்னும் கொஞ்சம் விரைந்து தீர்ப்புக்கொடுக்கவேண்டும்


visu
அக் 09, 2025 15:24

உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதே இப்போ விசாரணையே நடக்கலையே


V Venkatachalam
அக் 09, 2025 11:55

முதல் குற்றவாளி இறந்து போயிட்டான். அவன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட் டான்னு தெரிவிக்கலை. அது ஒரு புறம் இருக்கட்டும்.. இரண்டாவது குற்றவாளி யின் நிலமை என்ன? லிஸ்ட்டில் இல்லாம வெளியே சுத்திகிட்டு இருக்கானே அவனோட நிலமை என்ன?


Ramesh Sargam
அக் 09, 2025 11:33

நமது நாட்டில் பலர் மீது உள்ள வழக்குகள் இப்படித்தான் முடிவுக்கு வருகிறது. அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர், அதாவது ரவுடி நாகேந்திரன் போன்றவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள், அல்லது வயது முதிர்வினால் இயற்கை மரணம் அடைவார்கள். சட்டத்தால் தண்டிக்கப்பட்டால், கொலைசெய்யப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல். அந்த ஆறுதல் பலருக்கு கிடைப்பது இல்லை.


பிரேம்ஜி
அக் 09, 2025 12:18

உண்மைதான்! நீதி! நம் நாட்டில் சாமானியனுக்கு கிடைக்காத ஒரு அரிய வகை வஸ்து! ஆனால் பணக்காரர்கள் வாங்க முடியும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை