உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

சென்னை: 'ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மாணவ - மாணவியருக்கு, தனியார் வாயிலாக உணவு தயாரித்து வழங்குவதை கைவிட வேண்டும்' என, அரசுக்கு எஸ்.சி., - எஸ்.டி., விடுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும், 1,331 பள்ளி, கல்லுாரி விடுதிகளில், 65,000க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.

1,500 ரூபாய்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400; கல்லுாரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது.தமிழக அரசு, 2023 - 2024ம் நிதியாண்டில், 'நகரப்பகுதியில் செயல்படும் மாணவர் விடுதிகளில், 7 கிலோ மீட்டருக்கு ஒரு சமையலறை அமைக்கப்பட்டு, தனியார் நிறுவனம் சார்பில் உணவு தயாரித்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்' என்று அறிவித்தது. அதன்படி, சென்னையில் உள்ள 21 மாணவர் விடுதிகளில், ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டம், கடந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, சைதாப்பேட்டை மற்றும் வேப்பேரியில் உணவு தயாரிக்கப்பட்டு, வேனில் விடுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

தரம் சரியில்லை

உணவின் சுவை, தரம் சரியில்லை என்று கூறும் மாணவர்கள், பழைய முறைப்படி விடுதியிலேயே சமைத்து வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.அடுத்த கட்டமாக, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு தரப்பில் அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு மாணவருக்கு உணவுப்படி 50 ரூபாய் என்பதை, 100 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை கைவிட்டு, அந்தந்த விடுதிகளில் தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி, மதுரை மாவட்டங்களில், விடுதி மாணவ - மாணவியர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, சென்னை விடுதி மாணவர்கள் கூறியதாவது:ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தின்படி, கடந்த ஓராண்டாக தரமற்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இரண்டு இடங்களில் தயாரிக்கப்படும் உணவு, விடுதிக்கு வருவதற்குள், உணவின் சுவை, தன்மை மாறி விடுகிறது. உணவின் அளவும் குறைவாக உள்ளது.

உயர்த்த வேண்டும்

விடுதிக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருச்சி, கோவை விடுதி மாணவர்கள் சிலர் கூறுகையில், 'சிறை கைதிகளுக்கு ஒரு நாள் உணவுப்படியாக அரசு 135 ரூபாய் வழங்குகிறது. 'மோப்ப நாய்களுக்கு 20-0 ரூபாய் வழங்குகிறது. எங்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு 50 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. எங்களுக்கான உணவுப்படியை குறைந்தபட்சம் 100 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

K r Madheshwaran
மார் 18, 2025 16:48

மனித சக்திகளை மதிக்க தெரியாமல் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதால் இந்த நிலை மாற வேண்டும் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய மன்னன் வந்தால்தான் மக்களின் நிலை உயரும் இந்த திராவிடியா ஆட்சியில் எந்த துறையும் சேவையை செய்து நல்ல பேர் வாங்கியதாக தெரியவில்லை ஆனால் லஞ்சம் ஊழல் கஞ்சா டாஸ்மாக் கொலை கொள்ளை வழிப்பறி மாமூல் கற்பழிப்பு என அனைத்து விதமான விசயங்களிலுமே நம்பர் ஒன் நிலை ம் எல்லாவற்றுக்கும் தீர்வு 2026 தான்


visu
மார் 17, 2025 17:19

பொது சமையலறையில் சமைக்கும்போது பொருட்களை திருட முடிவதில்லை அதனால் ஊழியர்களே தூண்டிவிடுகிறார்கள் மாணவர்கள் விவரம் அறியாமல் தனி சமையலறையில் சமைத்தால் தங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என நினைகிறார்கள் அக்சய பாட்ரா என்ற அமைப்பு இந்தியாவில் பல பலமாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான உணவை இந்த முறைப்படி சிறப்பாக வழங்குகிறது


Bhaskaran
மார் 17, 2025 13:25

இலவசமாக எல்லாம் தந்து விடவேண்டும். அப்படி பழக்கப்படுத்திட்டாங்க


பாரத புதல்வன்
மார் 17, 2025 12:25

இது தாண்டா தெரு மாடல் ஆட்சி..... துடைத்து எறிய வேண்டிய கட்சி.....


Gurumurthy Kalyanaraman
மார் 17, 2025 12:11

மாணவர்கள் கொஞ்சம் பகுத்தறிவை உபயோக படுத்த வேண்டும். கைதிகள் இல்லாவிட்டால் எங்கள் கட்சியே இல்லையே அவர்களுடனான உங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வது? அநியாயம்.


Jay
மார் 17, 2025 11:07

கர்நாடகாவில் இஸ்கான் அக்ஷயா பாத்திரம் அமைப்பு சிறந்த முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவும், ஜெயில் கைதிகளுக்கு மூன்று வேளை உணவும் நல்ல முறையில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். வீம்பு பார்க்காமல் அரசு அக்ஷய பாத்திரம் இந்த சமையல் வேலையை கொடுத்தால் அவர்கள் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவார்கள். கர்நாடக அரசு அவர்களுக்கு 50 ரூபாய்களுக்கு குறைவாகவே கொடுக்கிறது. அட்சய பாத்திரம் அமைப்பு அரசு கொடுக்கும் நிதி மட்டுமல்லாமல் அவர்கள் நன்கொடையும் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.


MUTHU
மார் 17, 2025 13:31

நல்ல உணவே நல்ல உடல். நல்ல உடல் நல்ல தெளிவான மனம். தெளிவான மனம் வந்தால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு திமுக அதிமுக திருமா போன்றவர்களுக்கு வோட்டு விழாது.


Rathinasabapathi Ramasamy
மார் 17, 2025 14:16

முத்து அதனால்தான் மக்கள் விழிப்படைந்து பிஜேபி அரசை வீட்டுக்கு அனுப்பிட்டார்கள் போல.


ராமகிருஷ்ணன்
மார் 17, 2025 10:27

கைதிகளால் போலீசாருக்கு வருமானம் உள்ளது, மோப்ப நாய்கள் போலீஸ்க்கு உதவிகள் செய்கிறது. உங்களால அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம், ஓட்டும் கிடையாது. அரசியல்வாதிகள் லாபம் இல்லாமல் எந்த வேலையும் செய்யவே மாட்டார்கள்.


Nallavan
மார் 17, 2025 09:57

நாய்களுக்கு சம்பாரிக்க சமைக்க தெரியாது, மாணவர்களுக்கு சமைக்க தெரியும், பகுதிநேரத்தில் சம்பாதிக்க தெரியும், மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம், செய்துகொள்ளலாம்


Ram
மார் 17, 2025 09:18

முதலில் இந்த விடுதிகள் எதற்கு, மக்களின் வரிப்பணம் வீண், இவர்களுக்கு ஓசி சோரூ, இடவொதுக்கீட்டில் குறைந்த மார்க் எடுத்தாலும் சீட்டு, அப்புறம் வேலையிலும் இடவொதுக்கீடு, ப்ரோமோசனிலும் கூட, இப்படியாக லிஸ்டு நீடுகொண்டேபோகிறது , ஆனால் ஒழுங்காக படிக்கும் பொதுப்பிரிவினருக்கு ஒன்றுமில்லை


nv
மார் 17, 2025 09:04

திராவிட மாடல்!! மாணவர்களை வெறும் போஸ்டர் ஒட்ட தேர்வு செய்யும் நல்ல மாடல்.. அவர்கள் பிள்ளைகள் ஹிந்தி பேசுவர், மற்றவர்கள் இவர்களை அண்டி மட்டுமே பிழைக்க வேண்டும்!! நல்ல மாடல் தமிழன் உருப்பட்டு விடுவான்!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை