வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுவரை அளித்த வாக்குறுதியில் எத்தனை நிறைவேற்றப்பட்டன, ஏன் 10 லட்சம் கோடி கடன் வந்தது என்று வாக்காளித்த மக்களுக்கு ஒரு வெள்ளையறிக்கை வெளியிடுங்கள்.
சென்னை: ''கூட்டுறவு சங்கங்களில், பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன், 2000 கோடி ரூபாய் வழங்கப்படும்,'' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தை மதிப்பீடு செய்து, உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக, 9.34 கோடி ரூபாயில், 1437 'கிளவுட்' பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும்* காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள, 129 தொகுப்பு பால் குளிர்விப்பான்களுக்கு தேவையான அதிநவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவிகள் வழங்கப்படும்* பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க, 10 கோடி ரூபாயில், 500 ஆவின் பாலகங்கள் புதிதாக துவக்கப்படும்* கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு, கால்நடை பராமரிப்பு கடனாக, 2000 கோடி ரூபாய் வழங்கப்படும்* காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, வேலுார் உள்ளிட்ட, 14 மாவட்ட ஒன்றியங்களில், 2.40 கோடி ரூபாயில், 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்* பால் கொள்முதல் செய்ய தேவையான, பால் பரிசோதனை உபகரணங்கள், 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்* மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம், 2.23 கோடி ரூபாயில், கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்* பால் உற்பத்தியாளர்களுக்கு, 72 லட்சம் ரூபாயில், தீவன விதைகள் வழங்கப்படும்* உம்பளாச்சேரி இன பசு மாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த, 1.94 கோடி ரூபாயில், தேசிய பால் பதிவு திட்டம் செயல்படுத்தப்படும்* பால் உற்பத்தியாளர்கள், 12,000 பேருக்கு, கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, 60 லட்சம் ரூபாயில் வழங்கப்படும். மாவட்ட அளவில், சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, 15 லட்சம் ரூபாய் செலவில், விருது வழங்கப்படும்* செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும்* கறவை மாடுகளில், மடி நோயை கண்டறிய, 15 லட்சம் ரூபாயில், 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்* கறவை மாடுகளில், கன்று ஈனும் இடைவெளியை குறைக்க, 1.73 கோடி ரூபாயில், 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்* பால் உற்பத்தியாளர்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழியாக, நுண்கடன் வழங்க, 'வெண் நிதி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்* ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி உருவாக்கப்படும்* தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்* தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்.
இதுவரை அளித்த வாக்குறுதியில் எத்தனை நிறைவேற்றப்பட்டன, ஏன் 10 லட்சம் கோடி கடன் வந்தது என்று வாக்காளித்த மக்களுக்கு ஒரு வெள்ளையறிக்கை வெளியிடுங்கள்.