உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசிடம் வாங்கிய ரூ.22 கோடி சும்மா கிடக்குது

மத்திய அரசிடம் வாங்கிய ரூ.22 கோடி சும்மா கிடக்குது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பழநியில் பழநி தண்டாயுதபாணி சித்த மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் ரூ.22 கோடி நிதி வாங்கி இரண்டாண்டாகியும் கல்லுாரி துவங்கவில்லை. சித்தா டாக்டர்கள் கூறியதாவது: பழநியில் பழநி தண்டாயுதபாணி சித்த மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, மத்திய அரசிடம் 22 கோடி நிதி உதவி பெற்றும் இன்னும் கல்லுாரி துவங்கப்படாமல் உள்ளது.நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 50 படுக்கையுள்ள மருத்துவமனை கட்டப்பட்டு விட்டது. மருத்துவமனை ஆரம்பித்து இரண்டாண்டுகள் கழித்தே கல்லுாரி ஆரம்பிக்க முடியும். இதுவரை கல்லுாரிக்கான முதற்கட்ட பணிகள் கூட ஆரம்பிக்கவில்லை. அடிப்படை வசதிகள், மருந்துகள், டாக்டர்களும் முழுமையாக இல்லை. இந்தாண்டு சட்டசபையில் சித்த மருத்துவம் பற்றிய புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரம் சென்னை அரும்பாக்கத்தில் யுனானி கல்லுாரிக்கு கூடுதல் கட்டடம், யோகா, இயற்கை மருத்துவத்திற்கு கூடுதல் கட்டடம், மதுரை திருமங்கலம் ஹோமியோபதி கல்லுாரி, நாகர்கோவில் ஆயுர்வேத கல்லுாரிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.சென்னை மற்றும் திருநெல்வேலியில் உள்ள சித்தா கல்லுாரிகளுக்கு விடுதி வசதியில்லை. தமிழக அரசு சித்த மருத்துவத்தை புறக்கணித்து வருகிறது. மாநில ஆயுஷ் சொசைட்டியில் இந்திய மருத்துவத்துறை இணை இயக்குநர் பணியிடத்தில் சித்தா டாக்டரை நியமிக்காததால் மாநிலம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களில் சித்த மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு யோகா, இயற்கை மருத்துவம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.பழநியில் 5 ஆண்டுக்கு முன் பழனியாண்டவர் கல்லுாரிக்கு பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசிடம் இரு தவணைகளாக நிதி வாங்கி இரண்டாண்டுக்கு மேலாகிறது. தாமதம் இன்றி கல்லுாரியை துவங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 11:02

சுருட்ட முடிஞ்சா சுருட்டியிருப்போம்ல ?? தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் செலவுக் கணக்கு கேட்பது .....


Anbuselvan
மே 06, 2025 08:32

தினமலர் மற்றும் துக்ளக் தவிர எந்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் இதை பற்றி எழுத மாட்டார்கள் போலும்.


பாமரன்
மே 06, 2025 08:20

இந்த மாதிரி செய்திகள் போடும் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் வாதத்தையும் கேட்டு போடுவது தான் பத்திரிகை தர்மம்... சிலரை திருப்தி பண்ண போட்டிருந்தா நோ கமெண்ட்ஸ்...


Yes your honor
மே 06, 2025 09:33

ஆம்மாம், திருடனிடமே சென்று நீ திருடியிருக்கமாட்டாய், நான் தான் தவறாகப் புரிந்துகொண்டுள்ளேன் என்று வேண்டுமானால் கூறிவிடலாமா? இந்த விடியாத அரசு இந்த திட்டத்தை காலதாமதப்படுத்துவதே, அந்தப் பணத்தை ஏதாவது வகையில் ஆட்டையைப் போடத்தான் இருக்கும். கல்லூரியை ஏன் கட்டவில்லை என்று, ஒத்த செங்கல்லைத் தூக்கிக் கொண்டு வக்கணையாகத் திரிந்த உதயநிதியைத் தான் கேட்கவேண்டும்.


raja
மே 06, 2025 08:02

ஓங்கோல் திருட்டு திராவிட கோவால் புர இந்துக்களின் கோயில்களையே இடிக்கும் இந்து விரோதி எப்படி சித்த மருத்துவத்தை வளர்ப்பான். சித்த மருத்துவம் என்பது சதா சர்வ காலமும் சனாதனத்தின் ஒரு பிரிவான சிவனை கும்பிடும் சைவ சமயத்தை வளர்த்த அகத்தியர் கொங்கணர் பாம்பாட்டி சித்தர் போன்றோர்களால் தமிழர்களுக்கு அருள பெற்றவை அல்லவா... சனாதனத்தை மலேரியா டெங்கு கொசு போல் ஒழிக்கவேண்டும் என்று கூறிய கயவர்கள் எப்படி நிதி ஒதுக்குவார்கள்.. இந்நேரம் அதை தன் குடும்பத்திற்கு ஒதுக்கி இருப்பார்கள்....


Ramaswamy Sundaram
மே 06, 2025 13:02

ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க ஐய்யாதுரை ஆட்சியில 4000 கோடி மத்தியஅரசு கொடுத்தது எதற்காக தெரியுமா? சென்னையில் பாதாள சாக்கடைகளை தூர் வருவதற்காக... அதை அப்படியே அப்பழுக்கு இல்லாமல் செலவு செய்ததனால் தான் பாருங்ka போன மழைக்கு ஒரு சொட்டு நீர்கூட தேன் கலை...சும்மா மக்கள் படகு சவாரி செய்ய ஆசைபட்டாங்க அதுனால படகுகளை கொண்டு வந்தாரு தெரியும் illa?


xyzabc
மே 06, 2025 07:52

இந்த பணம் மாடல் மந்திரிகளுக்கு உதவும்.


எஸ் emm
மே 06, 2025 07:27

நில்லுங்கள் ஐயா. சொன்னதும் தொடங்க முடியுமா. மத்திய அரசு 22கோடி தானே கொடுத்திருக்கிறார்கள். இன்னும் 100 ஓ 200 கோடியோ வாங்கி வரைந்த மாதிரி செய்திகளை போடாதீர்கள். இனி பணம் எங்களுக்கு எந்த மூலைக்கு இது கேவலமா இல்லை. நாங்கள் அடித்தால் ஒட்டு மொத்தமாக அடிக்கணும் இல்லையேல் எங்க வம்சத்திற்கே அவமானம். எங்களுக்கு மருத்துவ கல்லூரி முக்கியம் கிடையாது. எங்களுக்கு அந்த துரையின். முழுதோக் ஐயும் கிடைத்த பின் பரிசீழித்து தான் முடிவுடுப்போம். இது திராவிட மாடல் அரசு.


GMM
மே 06, 2025 07:16

சித்தா, ஆயர்வேதம் பல நோய்களை பக்க விளைவு இல்லாமல் நிரந்தரமாக குண படுத்தும். மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி அரசு, மக்கள் மருத்துவ செலவை குறைக்கும். நாடு முழுவதும் தேவைப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு மாநிலங்களிடம் நிதி கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் .


Palanisamy Sekar
மே 06, 2025 07:08

கடலில் பேனா சிலைவைக்க உதவாத மத்திய அரசின் பணத்தை நாங்கள் எங்கள் திராவிட மாடல் அரசு கையால் கூட தொட மாட்டோம் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.


xyzabc
மே 06, 2025 07:00

இவர்கள் AIMS பற்றி குறை சொல்கிறார்கள். வெட்க கேடு.


N Sasikumar Yadhav
மே 06, 2025 06:51

கள் எப்படி உடம்பு நல்லது செய்து விவசாயிகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது . திமுக நிர்வாகிகளின் சாராய வியாபாரம் படுத்துவிடுமென்பதால் கள்ளை தடைசெய்து வைத்திருக்கிறானுங்க அதுபோல திமுக நிர்வாகிகளின் ஆங்கில மருத்துவ வியாபாரம் படுத்துவிடுமென்பதால் சித்தமருத்துவத்தை கண்டுக்காமல் இருக்கிறானுங்க


முக்கிய வீடியோ