உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!

நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!

திருநெல்வேலி: திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் 1.8 கி.மீ., தூரத்துக்கு, சைக்கிள் பாதை ரூ 2.84 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.திருநெல்வேலி மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி நிதி வழங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளன. அப்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், அதிகாரிகள் தன்னிச்சையாக தேவையற்ற திட்டங்களில் கோடிக்கணக்கில் அரசு நிதியை வீணடித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v46hrmd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வாறு வீணான ஒரு முக்கியமான திட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சைக்கிள் பாதை. இந்த பகுதியில் ஏற்கனவே தார் சாலை இருந்த நிலையில், அதன் ஓரத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து, சில தடுப்பு பிளாஸ்டிக் அமைப்புகள் வைத்தனர்.மொத்தம் 1.8 கி.மீ. நீளத்திற்கான இந்தச் சைக்கிள் பாதைக்கு ரூ.2.84 கோடி நிதி செலவழிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள் அதில் பயனில்லை என்பது வெளிப்பட்டது. சைக்கிள் பாதையின் ஒவ்வொரு வீட்டு முன்பும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், சைக்கிள்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.மழை நீர் தேங்கி, சாக்கடை கலக்கும் சூழல் உருவாகி, பாதை பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்தது. பாதை பராமரிப்பு ஒப்பந்தக்காரர்களின் பொறுப்பாக இருந்தும், அவர்கள் கவனிக்காததால், தற்போது முழுவதுமாக பயன்பாடு இழந்து உள்ளது.ரூ.2.84 கோடி வீணாகியதற்குப் பதிலாக, இந்த நிதியில் திருநெல்வேலி மாநகராட்சியின் அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டியிருக்கலாம். உடைந்த மேற்கூரையுடன் செயல்படும் துவக்கப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்காகக் குறைந்தது 10 கட்டடங்கள் அமைக்க முடியும். வெறும் 1.8 கி.மீ. சாலையில் பச்சை பெயிண்ட் அடிக்கவே ரூ.2.84 கோடி செலவழிக்கப்பட்டது திருநெல்வேலி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய நிர்வாகத்திற்கும், செயல்படுத்திய அதிகாரிகளுக்கும் இருக்கும் பொறுப்பின்மையே இந்த நிலைமைக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செய்தி எதிரொலி!

ரூ 2.84 கோடி செலவில் அமைக்கப்பட்ட சைக்கிள் பாதை பயனின்றி இருப்பது குறித்து இன்று தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது. தற்போது மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அதை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Durai Pandian
மார் 05, 2025 07:18

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டம் போட்டவரை , அடி வெளுக்க வேண்டும்... தேவை இல்லாத திட்டம் அதிகம்...


Durai Pandian
மார் 05, 2025 07:15

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால், திருநெல்வேலி அசிங்கபடுத்திவிட்டார்கள் . பழைய பேருந்து நிலையம், பாளை பேருந்து நிலையம், திட்டம் போட்டவர்கள் முட்டாள்கள்...


spr
மார் 04, 2025 18:35

"ஸ்மார்ட் சிட்டி என்பது மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாநில அரசால் உருவாக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு வழங்கப்படுவது. மத்திய அரசு ஆடிட் மட்டுமே செய்யும். நிதி மேலாண்மை செய்யாது." செயல்பாடு என வரும்போது மாநில அரசுதான் ஆட்கள் பொருட்கள் என செலவழிக்க வேண்டும் ஆனால் பணம் முதலீடு செய்பவர் ஏன் கண்காணிக்கக் கூடாது? காரணம் இவையெல்லாம் மத்திய அரசை மாநில அரசுகள் எதிர்க்காமலிருக்க, அவர்கள் கொள்ளையடிப்பதற்காகவே கொடுக்கப்படும் லஞ்சம் மத்திய அரசின் முகவரான ஆளுநர் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் இது போன்ற நிகழ்வுகளைக் கண்காணிக்கலாம். மத்திய அரசுக்கு அறிவிக்கலாம் அண்ணாமலை கூடச் செய்யலாம்


திருடன்
மார் 04, 2025 16:31

கொஞ்சம் செவனின் இருக்கீங்களா உருப்படி இல்லாத திட்டத்தில் தான் எங்களுக்கு கமிஷன் நல்லா கிடைக்கும் உருப்படியான திட்டம் வேணும்னா நீங்களே உங்க வீட்டு காசுல வந்து பண்ணிக்கங்க


MUTHU
மார் 04, 2025 16:07

பொதுவாக மாநகராட்சிகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் செலுத்தும் வரியும் லஞ்சமும் அதை வைத்து அவர்கள் வீணடிக்கும் பணமும் நம் மக்களுக்கு தெரிவதில்லை. இவை எந்த கணக்கு வழக்குகளுக்கும் அடங்குவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம் GST மட்டுமே வீணானது என்பதே. ஆனால் மத்திய அரசு அதனால் மட்டுமே மாபெரும் திட்டங்களுக்கு உயிர் கொடுத்து வருகின்றது. மாநில அரசுகள் உள்ளாட்சி வரிப்பணத்தினை சூறையாடி வருகின்றது.


MUTHU
மார் 04, 2025 15:52

மதுரையிலும் இதை போன்றதே நிதி வீணடித்துள்ளனர்.


ديفيد رافائيل
மார் 04, 2025 15:16

கொள்ளையடிப்பதற்காகவே smart city என்ற திட்டத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து கொண்டு வருகின்றனர். யாராவது கேள்வி கேட்டா பொய் வழக்கில் ஜெயிலில் போடுவானுங்க.


A.Gomathinayagam
மார் 04, 2025 14:02

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கோடிக்கணக்கில் வரி செலுத்துபவர்கள் பணம் வீணடிக்க பட்டது என்பதை மறுக்க முடியாது


MUTHU
மார் 04, 2025 15:51

ஸ்மார்ட் சிட்டி என்பது மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாநில அரசால் உருவாக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு வழங்கப்படுவது. மத்திய அரசு ஆடிட் மட்டுமே செய்யும். நிதி மேலாண்மை செய்யாது.


Sankare Eswar
மார் 04, 2025 13:52

திருட்டு வீடியோ மொடல் சாதனையில் இதுவும் ஒன்று


தத்வமசி
மார் 04, 2025 13:21

படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம். முன்னேறிய மாநிலம்.


சமீபத்திய செய்தி