உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்வது வழக்கம். இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து வந்த பயணியிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் சுமார் 2.8 கிலோ மதிப்புள்ள உயர் ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தினர். அதில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சாவை, இலங்கை மற்றும் சென்னை வழியாக பெங்களூரு கொண்டு செல்ல திட்டம் தீட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.8 கோடியாகும். அதேபோல, தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ஒரு கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். இந்தப் பார்சல் யாருக்கு வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sudha
ஜூன் 13, 2025 15:11

அனுப்பியது யார் தெரியாது பெறுநர் யார் தெரியாது, கஞ்சா உயர் ராகம் மற்றும் அதனால் மதிப்பு மட்டும் தெரியும். நம்பலாம்


Ramesh Sargam
ஜூன் 13, 2025 13:09

அந்த விமானம் ஸ்ரீலங்காவிலிருந்து புறப்படும் முன்பு அதில் பயணித்தவர்களை அந்நாட்டு பாதுகாவலர்கள் பரிசோதிக்கவில்லையா? Something wrong with Sri Lankan Airport Security Officials. Need to check investigate them first.


Ramesh Sargam
ஜூன் 13, 2025 13:09

அந்த விமானம் ஸ்ரீ லங்காவிலிருந்து புறப்படும் முன்பு அதில் பயணித்தவர்களை அந்நாட்டு பாதுகாவலர்கள் பரிசோதிக்கவில்லையா? Something wrong with Sri Lankan Airport Security Officials. Need to check investigate them first.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை