உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.387 கோடி மின்மாற்றி ஊழல்: சி.பி.ஐ.,க்கு மாற்ற அன்புமணி கோரிக்கை

 ரூ.387 கோடி மின்மாற்றி ஊழல்: சி.பி.ஐ.,க்கு மாற்ற அன்புமணி கோரிக்கை

சென்னை: 'தமிழகத்தில் 387 கோடி ரூபாய் மின்மாற்றி கொள்முதல் ஊழல் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், 2021 முதல் 2023 வரை மின் வாரியத்திற்கு, 1,182 கோடி ரூபாயில், 45,800 மின் மாற்றிகள் வாங்கப்பட்டன. இதில், 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின் வாரியத்திற்கு 387 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக காவல் துறையின் லஞ்ச தடுப்பு பிரிவிடம், கடந்த 2023ல் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மின்மாற்றி கொள்முதல் முறைகேடுகளில், முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர், மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. அவரை தியாகி என, முதல்வரே பாராட்டுகிறார். இந்த வழக்கின் இரண்டாவது எதிரியாக விசாரிக்கப்பட வேண்டிய, மின் வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி, பாதுகாப்பான முறையில் மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது எதிரியான, மின்வாரிய நிதி கட்டுப்பாட்டாளர் காசிக்கு, மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக தி.மு.க., அரசு பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, மின்மாற்றி கொள்முதல் ஊழல் வழக்கை சி.பி.ஐ.,க்கு, தமிழக அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ