உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்

சென்னை: சென்னையில், 411 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, அமைச்சர் ராஜகண்ணப்பன், அவரின் மகன்கள் பெயரில் அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான ஆதாரங்களுடன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சென்னை பரங்கிமலையில் உள்ள நிலங்கள், சிலருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பின், அந்த நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

நடவடிக்கை இல்லை

எனினும், இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 36 'சர்வே' எண்களில், பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் பல புகார்கள் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, அரசு நிலங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. ஆனால், மீட்கப்படும் சிறிய மனைகளை ஒட்டியுள்ள ஒரு பெரிய நிலப்பகுதி மட்டும் நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை.அந்த நிலத்தின் சர்வே எண்கள் 1352 மற்றும் 1353. அது, ஆலந்துார் மற்றும் நங்கநல்லுார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ளது. நிலத்தின் பரப்பு 4.52 ஏக்கர். சர்வே எண் 1353ல், 4 ஏக்கர் 31,378 சதுர அடி, சர்வே எண் 1352ல், 12,964 சதுர அடி உள்ளது. இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த் துறை பதிவேடு காட்டுகிறது. ஆனால், 1991 - 1996 கால கட்டத்தில், காதியா குடும்பத்திற்கு சொந்தமான, 'டெக்கான் பன் ஐலண்ட் அண்டு ஹோட்டல்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில், இந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அப்போது, கண்ணப்பன் அமைச்சராக இருந்தார். கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப்குமார் ஆகியோர், டெக்கான் பன் ஐலண்ட் அண்டு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில், 2015ல், ஆலந்துார் தாசில்தார், சென்னை தெற்கு இணை அலுவலக சார் - பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள்.'இந்த நிலங்கள், தற்போது அரசு நிலங்கள். இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது. இதற்கு முன் யாராவது பத்திரப்பதிவு செய்திருந்தால், அதை ரத்து செய்து அறிக்கை அளிக்க வேண்டும்' என்று, கூறியுள்ளார். ஆனால், தாசில்தாரின் உத்தரவுக்கு முரணாக, மேற்படி நிறுவனத்தின் பெயரில் இருந்த, 4.52 ஏக்கர் நிலம், ராஜகண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் அவர்களுடையது தான் என்று சித்தரிக்கும் நோக்கில், 4.52 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை ஏழு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து, பின் அதை மீட்டது போல பதிவு செய்துள்ளனர்.அப்படி அடமானம் வைக்கப்பட்ட நிறுவனமும், ராஜகண்ணப்பனின் மகன்களுக்கு சொந்தமானது தான். சொத்துரிமை ஆவணங்களை தயார் செய்வதற்காகவே, இந்த அடமான நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. தற்போது, சர்வே எண் 1352ல் உள்ள, 12,982 சதுரடி நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக, பல்லாவரம் தாசில்தார் பலகை வைத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை ஒட்டியே சர்வே எண் 1353ல் உள்ள, 4 ஏக்கர் 31,378 சதுரடி நிலம் தொடப்படவில்லை. அதில், ராஜகண்ணப்பனின் மகன்கள் செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக, விளம்பர பலகையும் வைத்துள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 411 கோடி ரூபாய்.அமைச்சர் ராஜகண்ணப்பனின் செல்வாக்கு காரணமாகவே, அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த் துறை மீட்காமல் உள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மகன்கள் பெயரில் சொத்து சேர்த்துள்ளார் அமைச்சர். அந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அதை அபகரிக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

எங்கள் சொத்து

இதற்கிடையில், டெக்கான் ஐலேண்டு அண்டு ஹோட்டல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சரவணகுமார், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில், 4 ஏக்கர் 31,378 சதுரடி நிலம் மற்றும் கட்டடத்தை, எங்கள் நிறுவனம் முந்தைய நில உரிமையாளரிடம் இருந்து, 1991ல் வாங்கியது. 30 ஆண்டுகளுக்கு முன் கிரையம் பெற்ற தனிப்பட்ட சொத்தின் மீது, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.மேலும், 2015ல் போடப்பட்ட உத்தரவு எதுவும், அதற்கு முந்தைய கிரையப் பத்திரத்தை கட்டுப்படுத்தாது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என, சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, தவறான தகவல்கள் தெரிவித்து, அவதுாறு பரப்பிய நபர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.

சட்டப்படி சந்திப்பேன்!

மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், தவறான தகவல்களை, பத்திரிகைகள் வழியாக பரப்பி வருகிறவர்களை, சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்.- ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

INDIAN
அக் 24, 2024 08:20

திரு METTAITAMIL அவர்களுக்கு அஜித்பவார் மீது ஊழல் இருந்தால் நீதிமன்றத்தை அணுகவேண்டியதுதானே என்று கேட்கும் நீங்கள் இந்த கேள்வியை மோடி அவர்களிடமே கேட்கவேண்டும் ஏனெனில் குற்றம் சுமத்தியவறே அவர்தான் .பின்பு பத்தே நாட்களில் அவரோடு சேர்ந்து ஆட்சி அமைத்ததும் அவரே , நிர்மலா சீதாராமன் மீது உள்ள புகாருக்கு நீதி மன்றத்தை அணுகலாம் என்று கூறியிருக்கிறீர்கள் ,தற்போது அது நீதிமன்ற விசாரணையில்தான் இருக்கிறது 2G ஊழலை சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார் 11 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை , நான் ஒன்றும் திமுக அல்லது திமுக அமைச்சர்களுக்கு ஆதரவாக பேசவில்லை , 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது கூறுகிறார்கள், அதுவும் அப்போதே இது தெரியும் என்று கூறும் இவர்கள் இதுவரை வெளியிடாததற்கு என்ன காரணம்? அல்லது இப்போது வெளியிட கரணம் என்ன என்று கேட்டு இருக்கிறேன், மேலும் இதில் விசாரணை செய்து அரசு நிலமென்றால் மீட்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நிர்மலா சீதாராமன் பற்றியும் மோடி பற்றியும் பேசுவது நமக்கு தொடர்பில்லாததுபோல் பேசுவது என்ன நியாயம்? தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ,


Dhurvesh
அக் 23, 2024 21:28

அறப்போர் இதை வழக்கு செய்து மீட்க்கலாமே இங்கு குழாய் அடி சண்டைக்கு பதில்


Jysenn
அக் 23, 2024 19:08

இந்த 400 கோடி அண்ணாயிசத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.


jgn
அக் 23, 2024 15:26

பொருள்: ஊழலற்ற தேசத்தை நோக்கிய உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு அன்புடையீர் / மேடம், இந்த கடிதம் உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும் உயர்ந்த உற்சாகத்துடனும் காணும் என்று நம்புகிறேன். ஊழலை எதிர்த்துப் போராடவும், நம் நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உங்கள் அமைப்பான ஊழல் இல்லாத சங்கம் செய்து வரும் பாராட்டத்தக்க பணிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க நான் இதை எழுதுகிறேன். நெறிமுறை நடைமுறைகளை வளர்ப்பதற்கும், பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், ஊழலற்ற சமுதாயத்திற்காக வாதிடுவதற்கும் நீங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டத்தக்கவை, மேலும் அவை நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனிநபர்களையும் நிறுவனங்களையும் பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பயனளிக்கும் ஒரு நியாயமான மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்க நீங்கள் பங்களிக்கிறீர்கள். நேர்மையில் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்குவதில் உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. உங்களது முன்முயற்சிகள் ஊழலை ஒழிக்க உதவுவது மட்டுமின்றி, மற்ற அமைப்புகளையும், தனிநபர்களையும் உங்களைப் பின்பற்ற ஊக்குவித்து, சிறந்த நிர்வாகத்தை நோக்கி கூட்டாக உந்துதல் அளிக்கிறது. இந்த தேசத்தின் பெருமைமிக்க குடிமகன் என்ற வகையில், இந்த நோக்கத்திற்காக நீங்கள் கொண்டு வரும் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். தயவுசெய்து நல்ல பணியைத் தொடரவும், உங்கள் பங்களிப்புகள் நாட்டிற்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் உறுதியாக இருங்கள். ஊழலற்ற நாட்டை உருவாக்கும் உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


angbu ganesh
அக் 23, 2024 15:16

கரை படியாத கரங்களே இரும்பு கொண்ட எங்கள் முதல்வரேய் ஊழல் என்றல் என்ன வென்று தெரியாத உண்மையே அறிவாலய தாய் பத்திர பாத்திரத்தை பத்திர படுத்திய வாழ்க


R.PERUMALRAJA
அக் 23, 2024 13:55

இது என்ன பிரமாதம் ...சிறையில் இருந்து செந்தில் பாலாஜி என்னும் ஒருவர் வெளியே வந்து இருக்கிறார் . அவர் ஆட்டைய போடுவார் பாருங்கள் உலகம் அசந்துவிடும் . " ஒரு ஆறு மாதத்திற்கு யார் கண்ணில் படமால் வாயை மூடிக்கிட்டு கம்முன்னு உனக்கு வேண்டியதை மட்டும் ஆட்டைய போடு " என்று தலைமை சொல்லி அனுப்பியதாக தகவல் . இன்னும் எத்தனை acre அரசு நிலங்கள் கொங்கு பகுதியில் கொள்ளை போகிறதோ இறைவனுக்கே வெளிச்சம்


Madras Madra
அக் 23, 2024 13:45

இந்த அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த திமுக ஊழல்கள் எத்தனை ? நம்ப முடியவில்லை .


sugumar s
அக் 23, 2024 12:36

raja kannappan should resign and face court proceedings. most ministers are corrupt.


Anand
அக் 23, 2024 12:31

இந்த அமைச்சர்கள் ஒவ்வொருவர் முகமும் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தி உள்ளது, பார்த்தாலே புரிந்துவிடும் இவர்கள் அவ்வளவு நல்லவர்கள் என்று......


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2024 12:16

எனக்கென்னவோ அறப்போர் இயக்க ஜெயராமன், ஜாக்கிரதையாக இருக்கணும் போல தெரியுது. போலீஸ் கமிஷனர் ".." இப்போ சென்னையில் தான் இருக்கிறார். அதுனால, நிறைய குண்டாஸ் வர்றதுக்கு வாய்ப்புகள் அதிகம். பின்னாடியே கஞ்சாவும் வரலாம். அப்படியே பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் உங்களை எதிர்த்து காலணி ஊர்வலமும் நடத்தலாம். எதுக்கும் ஜாக்கிரதை சார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை