உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு தந்த ரூ.444 கோடி சும்மா கிடக்குது; ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையுமா

மத்திய அரசு தந்த ரூ.444 கோடி சும்மா கிடக்குது; ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையுமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கிய போதிலும், மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தராததால், பல ஆண்டுகளாக ரயில் பாதை பணி முடங்கி உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்துக்காக, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில், பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு, 1914 பிப்., 24ல் மெயில் ரயில் சேவை துவக்கப்பட்டது.100 ஆண்டுகளுக்கு முன்பே, தனுஷ்கோடி இந்தியாவின் தென்கடலோர வணிக மையமாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.1964 டிச., 22ல் தாக்கிய புயலில், தனுஷ்கோடி ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. 55 ஆண்டு கழிந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு புது ரயில் பாதை அமைக்கமத்திய அரசு முடிவுசெய்தது.இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி, 2019 மார்ச் 1ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். திட்ட மதிப்பீடு மொத்தம், 733 கோடி ரூபாய். பிரதமர் மோடி துவக்கி வைத்த இத்திட்டத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இதுவரை, 444 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திட்டப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது.தமிழகம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் என, தினமும் ஒரு லட்சம் பேர் வரை தனுஷ்கோடி வந்து செல்கின்றனர்.ராமேஸ்வரம் மண்டபம் வரை, ரயிலில் வரும் பொது மக்கள், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார்களிலும், வேன்களிலும் செல்கின்றனர்.ராமேஸ்வரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை சுற்றி பார்க்கின்றனர்.ஆனாலும், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.சுற்றுலா பயணியர் கூறியதாவது: ராமேஸ்வரம் புனித தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள கோவிலில் தரிசனம் செய்யவும், அருகில் தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை சாலை வழியாக இருபுறமும் கடல் அழகை காணவும் மக்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதையை மீண்டும் அமைத்தால், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறுகூறினர்.

நிலம் ஒதுக்காததே பிரச்னை

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ாமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, மத்திய ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்கு 70.67 ஏக்கர் வனத்துறை நிலம், 108.25 ஏக்கர் மாநில அரசுக்கு சொந்தமான நிலம், 9.04 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். மாநில அரசு வாயிலாக தான், இந்த நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். இந்த திட்டத்திற்காக ரயில்வே இதுவரை, 444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், இந்த திட்டப் பணிகள் எந்த முன்னேற்றமும் இன்றி இருக்கின்றன.இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. நிலம் கையகப்படுத்தி தந்தால், பணிகளை துவக்க ரயில்வே தயாராக இருக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

sankaranarayanan
டிச 29, 2024 18:26

மத்திய ராசு கொடுத்த 444-கோடி பணம் யாருக்குமே பயன்படாமல் சும்மா கிடக்குது அதைத்தான் சொல்கிரார்களே தவிர அங்கே சில சாலைகள் போடப்பட்டுள்ளன சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் சொல்வது கட்டுக்கதை ஒழுங்காக மாநில அரசு உடனே செயலில் ஈடுபட்டு நிலத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் எப்போதோ இந்த காரியம் முடிந்திருக்கும் எங்கே எல்லா மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களும் உடைப்பிலே போட்டுவிட்டு, தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்றால் என்ன பயன் யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டிட்டுக்கொண்டதற்கே சமம்


என்றும் இந்தியன்
டிச 29, 2024 17:10

அந்த ரூ 444 கோடி லூலுக்கு போய் விட்டது An official clarified that in a letter dated April 21, 2023, Chief Minister MK Stalin explained the challenges to Modi and requested a review or cancellation of the proposal. A southern railway official said, “The last we received was that the state government had withdrawn the land acquisition notification for the project. We are awaiting further direction from the Railway Board.”


M Ramachandran
டிச 29, 2024 16:14

இந்தியாவின் தென் கோடி மூலை. நம் அடுத்து உள்ள இலங்கை நமத்து தகுந்த நாடு அல்ல . சீனாவுடன் உறவு. மறுபுறம் பாகிஸ்தானுடன் உறவு. இந்த நிலையில் ராணுவ முக்கியத்தை வைத்து தான் காய் நகர்த்தி உள்ளது. இங்குள்ள அரசு அதைய்ய மனதில் கொள்ள வேண்டும். எதிர்க்காக அவ்வளவு செலவு செய்து ரயில் பாதைய்ய அமைக்க வேண்டும் என்று. அது மட்டு மல்ல உச்சிப்புளி கடற்கரையை ஸ்தலம் அருகில் உள்ளது கொஞ்ச தூரத்தில் தஞ்சை நேவல் பேஸ் உள்ளது. நாட்டின் பாது காப்பு மிக அவசியமானது


Svs Yaadum oore
டிச 29, 2024 14:44

கூகுளை தேடிப்பார்த்து விட்டு படிக்காத திராவிடனுங்க பதிவு போடுது ...இவனுங்களுக்கு வரலாறும் தெரியாது படிப்பறிவும் கிடையாது தமிழும் தெரியாது ..விடியல் அரசு சுற்றுலா துறை என்ன சொல்லுது ?? மிகவும் பிரபலமான சுற்றுலா மையமான தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அழகிய கடற்கரை ஒருபுறம் மன்னார் வளைகுடா மற்றும் மறுபுறம் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த அற்புதமான கடற்கரை தலமானது வரலாறு, தொன்மங்கள் மற்றும் அழகு நிறைந்த இடமாகும். .ராமாயணத்தின் இந்திய இதிகாசத்திலிருந்து, ராமர், தனது வில்லின் முடிவை சுட்டிக்காட்டி, அரக்க மன்னன் ராவணனின் லங்காவை அடைய கடலின் குறுக்கே பாலம் கட்டுமாறு தனது படைகளை கேட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது....15 கிமீ நீளம் கொண்ட தனுஷ்கோடி கடற்கரையானது அதிக அலைகளை அடிக்கடி சந்திக்கும் ஒன்றாகும். இருந்தபோதிலும், இந்த இடம் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் தனியாக பயணிப்பவர்களுக்கு ஒரு சிறந்த விடுமுறை இடமாகும். ....இது விடியல் அரசு சுற்றுலா துறை தளம் ....


veera
டிச 29, 2024 13:51

....comedy show started


Svs Yaadum oore
டிச 29, 2024 13:50

தனுஷ்கோடியில் யாரும் வாழ்வதில்லையாம். ஊருக்குள் எதுவும் இல்லையாம். பிறகு எதுக்கு இந்த ஊருக்கு ரயில் என்று கேள்வி?? .....இந்த வருடம் ஜனவரி மாதம் பிரதமர் மோடி அய்யா வருகைக்கு பின், அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு ....விடுமுறை நாட்களில் தினமும், 5,000 பேர் மற்ற நாட்களில், 2,000 பேர் வரை வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது ....அவர்களில் பலர், மணல் திட்டில் ராமர் வழிபட்டது, ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பார்க்க விரும்புகின்றனர் ....இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு பொருளாதாரம் உயர்ந்துள்ளது .....ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை நிச்சயம் அமையும் ..இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது ..


V வைகுண்டேஸ்வரன்
டிச 29, 2024 14:03

Have you attempted to visit Dhanushkoti? குடிக்க தண்ணீர் கூட இல்லாத இடம் தான் தனுஷ்கோடி. தினம் 5000 பேர் போறாங்களாம். 5000 பேர் அந்த திட்டின் 500 மீட்டர் அகலத்தில் நிற்கக் கூட முடியாது. Vehicles are restricted from entering within 2 kilometers of Dhanushkodi. To reach the tip of Dhanushkodi, visitors need to walk almost half an hour in the hot sun. After 1 batch of 50 - 60 people go and come back only, next batch ol would be allowed. No sea bathing allowed. There are no restrooms or hotels in Dhanushkodi. Vendors sell cool masala cumbers and watermelons. All visitors must return by 4 PM. Carry umbrellas, sunscreens, and drinking water.


Svs Yaadum oore
டிச 29, 2024 14:48

கண்ட கண்ட தளங்கள் பார்க்காமல் விடியல் அரசு சுற்றுலா துறை தனுஷ்கோடி கடற்கரை பற்றி என்ன சொல்லுது என்று பார்க்கவும் ....முரசொலி மற்றும் சன் டிவி மட்டும் பார்த்தால் இப்படிதான் எழுத முடியும்.... அறிவு வளராது ...அல்லது ஒரு முறை தனுஷ்கோடி நேரில் செல்லவும் ...


Ganapathy
டிச 29, 2024 13:10

ஒரு வேளை தனுஷ்கோடியில் மசூதியை சர்சோ இருந்தா இந்த திருட்டுத் திராவிடிய களவாணிகழக பொண்டுக பயலுக இப்படி தாமதம் செய்யுமா?


MUTHU
டிச 29, 2024 12:49

இதுவெல்லாம் அண்ணாமலை போன்றோர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 29, 2024 12:37

1964 புயலில் அழிந்த ஊர் தான் தனுஷ்கோடி. அரை கிலோமீட்டர் அகலம் க்ஸ் 6 கிலோமீட்டர் நீளம் தான் மொத்த தனுஷ்கோடி பரப்பளவு. யாரும் இங்கே வாழ்வதில்லை. ஊருக்குள் எதுவும் இல்லை. எதுக்கு இந்த ஊருக்கு ரயில்?


Constitutional Goons
டிச 29, 2024 12:32

மத்தியில் உள்ள பாஜ அரசு மோடி மற்றும் இந்து மதவாதத்தின் விளம்பர பூமியல்ல தமிழகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை