உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு

திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் திருடு போன ரூ.5 லட்சத்தை மீட்க உதவிய கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார்,39. இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார். செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார். பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். செல்வகுமாரை நோட்டமிட்ட அந்த நபர் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். திருடியவர் பற்றிய சரியான விபரங்களுடன் போலீசில் தெரிவித்து ரூ. 5 லட்சம் பணத்தை மீட்க, கண்டக்டர் கவுதலை, டிரைவர் யோனா டேவிட் உறுதுணையாக இருந்தனர். அவர்களை விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் பரிசு வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஏப் 18, 2025 20:40

ஆயிரத்தில் ஒருசிலர் இப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள்.


sasikumaren
ஏப் 18, 2025 17:43

உழைத்த சேர்த்த பணம் கிடைத்து விடும் சிலருக்கு பலருக்கு அந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை


என்றும் இந்தியன்
ஏப் 18, 2025 17:22

திருடியவர் பற்றிய சரியான விபரங்களுடன் போலீசில் தெரிவித்து??? அவ்வளவு famous அந்த திருடன்


Varadarajan Nagarajan
ஏப் 18, 2025 16:32

நல்வழியில் உழைத்து சம்பாத்தித்து இழந்த பணத்தை மீட்க உதவிய நல்லுள்ளங்களுக்கு பாராட்டுக்கள். அவர்களது நற்செயல் தேவையேற்படும்போது அவர்களுக்கு பலமடங்காக மீண்டும் வெந்துசேரும்.


Sampath Kumar
ஏப் 18, 2025 16:26

யாரோ திருட்கிட்டு போறான் அதை யாரோ மீட்டும் கொடுக்கிறார்கள் இங்கே சிங்கள எல்லாம் சேர்ந்து திராவிட ஆட்சில் திருட்டு என்கிறார்கள் அதே சமயம் அந்த திருட்டையும் கண்டு பிடித்து உரியவரிடம்சேர்த்தும் உள்ளார்கள் உங்க சிங்கள செய்வார்களா ?? மாட்டார்கள் அம்புட்டும் ஆர்யா மாடல் பிராண்டுகள் அமுக்குளிகள்


Rajathi Rajan
ஏப் 18, 2025 15:51

திராவிட ஆட்சின் மகிமை இது, ... உழைத்த பணம் எங்கயும் போகாது...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 18, 2025 15:43

திராவிட மாடலிடம் இருந்து யார் மீட்பது ??


ديفيد رافائيل
ஏப் 18, 2025 15:09

அரசியல்வாதி மூலம் திரட்டப்படும் மக்களின் பணம் கோடி ரூபாயில்


Padmasridharan
ஏப் 18, 2025 14:56

இந்த காக்கி சாட்டை போட்டவங்களுக்கு இருக்கிற ஒழுக்கம் கூட பல காவலர்களுக்கு இல்லை, இருந்திருந்தா அரசுக்கு ஏன் அவலத்தை தருகிறார்கள். வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல மனிதர்கள் இது போன்றவர்கள் பல காக்கிச்சட்டை காவலர்களுக்கு எடுத்துக்காட்டு ஆவார்கள். இவங்க புகைப்படங்களையும் காவல்நிலையத்தில் வெய்ங்க சாமியோவ்


Savitha
ஏப் 18, 2025 14:53

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை