உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ.57 லட்சம் மோசடி!

பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ.57 லட்சம் மோசடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிஜிட்டல் கைது எனக்கூறி, பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம், 57 லட்சம் ரூபாயை, சைபர் குற்றவாளிகள் மோசடியாக பறித்துள்ளனர்.சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் விஞ்ஞானியும், பத்மபூஷண் விருது பெற்ற ஓய்வு பெற்ற, 77 வயது பேராசிரியரை, கடந்த செப்டம்பரில் தொடர்பு கொண்ட மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். 'விஞ்ஞானியின் மொபைல் போன் எண், வட மாநிலத்தில் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, உங்களை, ‛டிஜிட்டல் கைது' செய்துள்ளோம். நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. உங்களது வங்கி ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்' என்று கூறி, அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக, டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாகக் கூறிய மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், அவரது வங்கி கணக்கில் இருந்து, 57 லட்சம் ரூபாயை எடுத்துள்ளனர். வங்கி கணக்கை ஆராய்ந்த பின், அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் எனக்கூறி, அந்த மோசடி கும்பல் நபர்கள் அழைப்பை துண்டித்துள்ளனர்.சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஞ்ஞானி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அவரது மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகள் அடிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சைபர் குற்றவாளிகள் குறித்த, எவ்வித துப்பும் கிடைக்காமல் இருந்தது. தற்போது, வடமாநில காவல் துறையிடம், இதேபாணி குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை கேட்டு, அவர்களை கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 15, 2025 18:51

அஞ்ஞானி விஞ்ஞானி...


VENKATASUBRAMANIAN
டிச 15, 2025 08:18

படித்தவர்களுக்கு உலக அறிவு கிடையாது. அதன் வெளிப்பாடு ..


Venugopal S
டிச 14, 2025 23:23

கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுபடியும் நிரூபணம் ஆகி உள்ளது!


பெரிய ராசு
டிச 14, 2025 22:23

கரடியாக கத்துறாங்க டிஜிட்டல் கைது ஒரு பிராடுனு.. இவரெல்லாம் எப்படி விஞானி iit பத்மபூஷன் ,


Karthik Masagounder
டிச 15, 2025 02:31

அதுதான் எனக்கு ஒன்னும் புரியல...


Nandakumar Naidu.
டிச 14, 2025 21:15

what is the bloody digital arrest? why even educated fall prey to it?


Edi Shivaji
டிச 15, 2025 03:26

எல்லாம் முதிய வயதின் கோளாறு. என்ன செய்ய. முதியவர்களை நோக்கி சைபர் தாக்குதல்கள் நடக்கின்றன. முதியவர்கள் தனியாக வாழ்வதை தவிர்க்க வேன்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை