உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீக்கடை பெஞ்ச்: மூடிய 3 உர கடைகளை திறக்க கைமாறிய ரூ.6 கோடி!

டீக்கடை பெஞ்ச்: மூடிய 3 உர கடைகளை திறக்க கைமாறிய ரூ.6 கோடி!

''ஒருத்தரை ஜெயிக்க வைக்கவும், இன்னொருத்தரை தோற்கடிக்கவும் சபதம் எடுத்து, தேர்தல் வியூகம் வகுத்துட்டு இருக்காரு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளின், அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் பொறுப்பாளரா, 'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்காரு... இந்த தொகுதிகள்ல இருக்கிற முக்குலத்தோர், நாடார், தேவேந்திரகுல வேளாளர்னு முக்கியமான ஜாதி சங்க தலைவர்களை வளைக்கிற வேலைகள்ல இறங்கிட்டாரு வே...''முதல் கட்டமா, நேதாஜி சுபாஷ்சேனை, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளை சென்னையில பழனிசாமியை சந்திக்க வச்சு, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வச்சிருக்காரு...''அடுத்து, ரெண்டு தொகுதிகள்லயும் இருக்கிற மற்ற ஜாதி சங்க தலைவர்களுடன் பேச்சு நடத்திட்டு இருக்காரு... குறிப்பா, விருதுநகர்ல கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர்விஜய பிரபாகரனை ஜெயிக்க வைக்கிறதுலயும், ராமநாதபுரத்துல பன்னீர்செல்வத்தை தோற்கடிக்கிறதுலயும் ராஜேந்திர பாலாஜி தீவிரமா இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.''பிரேயர்லயே பிரசாரம் பண்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில, தினமும் கார்த்தால பிரேயர் நடக்கும்... அப்ப, 'கடந்த 10 வருஷமா ஆட்சியில இருந்து என்ன செஞ்சிருக்கா... இனி, நாம படிக்க நினைக்கற கல்வி கிடைக்காது... சமஸ்கிருதம், ஹிந்தி எல்லாம் வரும்... அந்த கொடுமை வராம இருக்க நீங்க பெற்றோரிடம் பேசணும்... 10 வருஷமா இருக்கற ஆட்சியை அகற்றணும்'னு சொல்றா ஓய்...''அதோட நிறுத்தினா பரவாயில்ல... மறுநாள், 'யாரெல்லாம் பேரன்டஸ்கிட்ட பேசினேள்... பேசாதவா ஏன் பேசல'ன்னு கிடுக்கிப்பிடி போட்டு, 'டார்ச்சர்' பண்றா ஓய்...''இது சம்பந்தமா, மாவட்ட முதன்மை கல்வி ஆபீஸ்ல சிலர் புகார் சொன்னப்ப, 'எழுத்துப்பூர்வமா, பெற்றோர் புகார் தந்தா தான் நடவடிக்கை எடுக்க முடியும்'னு நழுவறா... ஆனா, பிள்ளைகள் படிப்புக்கு பிரச்னை வருமேன்னு பெற்றோர் தயங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''ஜோஸபின் மேடம்... சாயந்தரமா நானே கால் பண்றேன்...'' என்றபடியே, ''சீல் வச்ச கடைகளை திறக்க சொல்லிட்டாங்க...'' என்றார்.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''தமிழக வேளாண் துறையில, முக்கிய புள்ளியின் மகனுடைய நண்பரது ஆட்டம் அதிகமா இருக்குதுங்க... விழுப்புரத்தில் தரக்குறைவான நுண்ணுயிர் உரங்கள் விற்றதா, மூணு உரக்கடைகளுக்கு சீல் வச்சாங்க... உரம் உற்பத்தி நிறுவனத்தையும் மூடுனாங்க...''அங்குள்ள துறையின் முக்கிய அதிகாரியும், நண்பரும் சேர்ந்து, கடைக்கு 2 கோடி ரூபாய் வாங்கிட்டு, மூடப்பட்ட மூணு கடைகளையும், நிறுவனத்தையும் வேறு பெயர்ல செயல்பட அனுமதி தந்துட்டாங்க... இது தவிர, இன்னும் ரெண்டு உரக்கடைகளுக்கும் புதுசா அனுமதி தந்திருக்காங்க...''இதெல்லாம், முக்கிய புள்ளிக்கு தெரிஞ்சு நடக்குதா, தெரியாம நடக்குதான்னு, துறை அதிகாரிகள் குழப்பத்துல இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''கோகுல், விஜயகுமார் இங்கன உட்காருங்க... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ