உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.7,000 கோடி கோகைன் கடத்தல் டில்லி, மும்பையில் ஈ.டி., ரெய்டு

ரூ.7,000 கோடி கோகைன் கடத்தல் டில்லி, மும்பையில் ஈ.டி., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த ஒரு வாரத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் டில்லி மற்றும் மும்பையில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.தென்மேற்கு டில்லியின் மஹிபால்புர் என்ற இடத்தில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை டில்லி போலீசார் கடந்த வாரம் பறிமுதல் செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக, துபாயை சேர்ந்த தொழிலதிபர் வீரேந்தர் பசோயா என்பவரை தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசார் அறிவித்தனர்.இதை தொடர்ந்து, மேற்கு டில்லி ரமேஷ் நகர் பகுதியில் உள்ள சிறிய கடையில், உணவுப் பொருட்களை போல பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 208 கிலோ கோகைன் போதை பொருள் நேற்று முன் தினம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2,000 கோடி ரூபாய்.இந்த கோகைன் போதைப் பொருள் தென் அமெரிக்காவில் இருந்து டில்லி எடுத்து வரப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியான சவீந்தர் சிங் என்பவர் இந்த கடத்தலுக்கு காரணமாக இருந்துள்ளார்.இவர், டில்லியில் 25 நாட்கள் தங்கியிருந்து இந்த போதைப் பொருள் வினியோகம் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது. அவரது கூட்டாளிகள் நால்வர் கடந்த 2ம் தேதி போலீசில் சிக்கியதை அடுத்து, சவீந்தர் சிங் பிரிட்டன் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நிலையில், சவீந்தர் உட்பட, ஆறு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.கோகைன் கடத்தல் தொடர்பாக டில்லி மற்றும் மும்பையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
அக் 12, 2024 18:45

இதெல்லாம் வடக்ஸ் ஏரியா. நம்ம தெக்கேதான் ஏஜன்சி நடத்துறோம். அங்கே திராவிட மாடல் ஆட்சி கிடையாது.


Lion Drsekar
அக் 12, 2024 15:47

ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஒரு அதன் , இதுதான் இன்றைய வளர்ச்சி, வந்தே மாதரம்


venugopal s
அக் 12, 2024 13:34

போகிற போக்கில் பழியைத் தூக்கி அப்படியே மார்க்கம், திராவிடம் என்று போட்டு விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!


N.Purushothaman
அக் 12, 2024 07:55

சீக்கிய சமயத்தில் உள்ள விஷமிகள் தற்போது இந்திய தேச விரோதிகளின் கைகோர்த்து சதிவேலைகளில் ஈடுபடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது ..அவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் ..


Kasimani Baskaran
அக் 12, 2024 06:51

அயலக அணிகள் லீலைகளில் ஈடுபட்டு இது போல பணம் பண்ணுகிறார்கள். சமூகவிரோதிகளை கழுவேற்றதவரை தீர்வில்லை.


சாண்டில்யன்
அக் 12, 2024 06:47

பேஷ் பாத்தீங்களா டில்லி பிஜேபி போலீஸ்தான் இவ்வளவு கோகைன் கண்டு பிடிச்சிருக்கு இங்கே dmk போலீஸ் ஒரு கிராம் கூட கண்டு பிடிக்க வில்லை என்று காலரை தூக்கி வீட்டுக் கொள்வார் தமிழக ஆளுநர்


N Sasikumar Yadhav
அக் 12, 2024 17:33

உண்மை அதுதானே . தமிழக காவல்துறை தமிழகத்தில் செய்ததை தமிழக ஆளுனர் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்


Barakat Ali
அக் 12, 2024 22:01

தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு, சிக்க வேண்டியவர்கள் சிக்கி உள்ளே போகவேண்டியவர்கள் போயிருந்தால் சாண்டில்யன் இப்படி இங்கே எழுதியிருக்க மாட்டார் ..... மத்திய மாநில உள்துறைகள், NCB, நாட்டைப் பாதிக்கும் விஷயங்களில் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் திராவிடமாடல் அரசியல் இவை அனைத்துமே குற்றவாளிகள் பிடிபடுவதை அல்லது தப்பிப்பதை நிர்ணயிக்கின்றன ......


Barakat Ali
அக் 12, 2024 22:15

மத்திய மாநில உளவுத்துறைகள் .......