உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஆரோக்கியதாஸ் என்பவரிடம் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஹவாலா பரிவர்த்தனைக்காக பணம் கடத்தப்பட்டதா என, விசாரிக்கப்பட்டு வருகிறது.ஹவுராவிலிருந்து சென்னை வழியாக வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (டிச.,07) அதிகாலை 2.45 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் மற்றும் குற்றவியல் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0aco0or4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் என்பதால் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரோக்கிய தாஸை அதிகாரிகள் கைது செய்து, ஹவாலா பரிவர்த்தனைக்காக பணம் கடத்தப்பட்டதா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
டிச 07, 2024 13:31

பயணிகளை அவர்கள் ரயில் ஏறும் ரயில் நிலையத்திலேயே ஸ்கேன் செய்து சோதித்திருந்தால் அங்கேயே இந்த திருடர்கள் பிடிபட்டிருப்பார்கள். இப்பொழுதெல்லாம் Puratchi Thalaivar MGR Chennai Rail நிலையத்தில் கூட, ரயில் ஏற வரும் பயணிகளின் உடமைகள் சோதிக்கப்படுவதில்லை? ஏன்? சோதிக்கும் ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துவிட்டதா...?


Tiruchanur
டிச 07, 2024 12:59

.. கபோதி. புத்தி எங்க போகும்? அப்பிடியே நல்ல புத்தி வந்தாலும் பாவமன்னிப்பு கேட்டா போச்சு. அவனுங்களும் அவனுங்க மதமும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 11:40

தேர்தல் சீசன் களைகட்டியாச்சு ..... இது ஜஸ்ட்டு நூலு உட்டு பார்க்குற வேலை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை