உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ. 75 ஆயிரம் லஞ்சம்: தனி தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் கைது

ரூ. 75 ஆயிரம் லஞ்சம்: தனி தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் மற்றும் அவரது இடைத்தரகர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூருக்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல இடங்களில் நிலம் கையகபடுத்தப்பட்டு அதற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w8krjv2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செயல்படும் வேல்யூ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் கையகபடுத்தப்பட்டது. இதற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த தொகையை பெற அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் விலசனை தொடர்பு கொண்டனர். பல முறை முயற்சித்தும் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் இழப்பீட்டு தொகையை தருவதாக தாசில்தார் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி முதற்கட்டமாக ரூ.75 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தாசில்தாரின் இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதி விநாயகம் மற்றும் துரை ஆகியோர் மூலம் எட்வர்ட் வில்சனிடம் கொடுக்கப்பட்டது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்ததுடன், லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mani . V
ஜூலை 01, 2025 04:28

கோடிகளில் லஞ்ச ஊழல் செய்யும் அரசின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக வெறும் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 01, 2025 03:51

நிலத்தின் மதிப்பில் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு என்று சொன்னாலும் நிலத்தின் மதிப்பு பதிவு செய்யப்படும் பொழுது குறைவாக காட்டப்படுவதால் பெரும்பாலும் நிலம் அரசுக்கு சந்தை விலையை விட ஐந்தில் ஒரு பங்குக்கு கிடைக்கும். அதிலும் இது போல கிரிமினல்களை வைத்து வசூல் வேறு. ஏக்கர் 70 லட்சம் விற்கும் இடத்தை வெறும் 11 லட்சத்துக்கு வாங்கியது அரசு.


sasikumaren
ஜூலை 01, 2025 01:53

லஞ்சம் வாங்கி குவிப்பவனுக்கு ஊழல் செய்யும் அரசியல் வியாதிகளை பார்த்து தான் தைரியம் வருகிறது இதன் காரணமாக அரசியல் வியாதிகள் எவன் ஊழல் செய்தாலும் முதலில் கைது செய்து சிறையில் தள்ளுங்கள் பிறகு புத்தி பிறக்கும்.


Murugesan
ஜூன் 30, 2025 22:01

மிக கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்கள் அரசியல்வாதிங்களும் அரசாங்க ஊழிய அயோக்கியனுங்களை வளர்ந்த கேவலமான அயோக்கியனுங்க


Ramesh Sargam
ஜூன் 30, 2025 21:51

இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் தலைவர். பொறுத்திருங்கள். இரும்பு கிடைக்கவில்லை. மேலும் நிதி பற்றாக்குறை.


David DS
ஜூன் 30, 2025 21:48

கோவில்பட்டி தாலுகா ஆபீஸ் பக்கம் வாங்க, டிப்டி தாசில்தார் பாலுவை புடிங்க பாக்கலாம். ஆதி திராவிடர் தாசில்தார் ராஜ்குமார் ஓவாரா போறார்.


Anantharaman Srinivasan
ஜூன் 30, 2025 21:35

லஞ்சம் வாங்கி மாட்டும் தாசில்தார் ரெஜிஸ்டர் யாரும் மந்திரிகளை காட்டிக்கொடுக்க மாட்டேங்கராங்களே.


அப்பாவி
ஜூன் 30, 2025 21:00

அப்பிடியே வூட்டுக்கு அனுப்புங்க.


Ramesh Sargam
ஜூன் 30, 2025 20:38

கேடுகெட்ட மகா மட்டமான ஆட்சி நடக்கிறது தமிழகத்தில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை