உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நியமனங்களில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

பணி நியமனங்களில் ரூ.888 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9or1lr0w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும். ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ன். கலெக்ஷன். கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ-25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்றவேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை.தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும். எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சிட்டுக்குருவி
அக் 29, 2025 19:16

சிவபாலன் தங்களிடம் ஏதாவது பணம் கொடுத்தவர் வாங்கியவர் பற்றிய தகவலிருந்தால் வெளியிடுங்கள்


தனவேல்
அக் 29, 2025 18:58

வழக்கம்போல சங்கிகள்,அடிமைகள், தற்குறிகள் கதறல்


Perumal Pillai
அக் 29, 2025 18:56

He will go through the red-coloured giant washing machine at Parrys in Madras and come out spotless white. That’s the usual procedure.


திகழ்ஓவியன்
அக் 29, 2025 18:48

பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.


திகழ்ஓவியன்
அக் 29, 2025 18:46

அய்யா 888 இப்படி மூன்று எட்டு என்று சொல்லி புரளி கிளப்பும் போதே இது டுபாக்கூர் என்று தெரியலையா இப்படி தான் டாஸ்மாக் 100000 கோடி ஊழல் அப்புறம் சுருங்கி 1000 கோடி இப்ப அதுவும் நட்டுக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நாறி கொண்டு இறுக்கு


Vasan
அக் 29, 2025 18:33

இது அநியாயம். சிலரிடம் 25 லட்சம், சிலரிடம் 35 லட்சம். ஏன் இந்த பாகுபாடு?


சிட்டுக்குருவி
அக் 29, 2025 18:32

ஐயா இப்படி கூக்குரல் இட்டால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் .ஆதாரங்கள் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை காவத்துறைக்கு அறிக்கை அனுப்பியதாகவும் சொல்கின்றீர்கள் .ஜனநாயகத்தின் மூலகருவாகவும் ஆணிவேராகவும் முக்கியமானதாக கருத்தப்படுவது வெளிப்படைத்தன்மை .அதனால் இந்த அமலாக்க துறை அறிக்கையை பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டி உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் .உயர்நீதிமன்றத்தில் ஏதாவது காரணம் கூறி தள்ளுபடியானால் உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்செல்லுங்கள். காவல் துறை அதிகாரிகள் மாநிலக்கட்டுப்பாட்டில் பணிசெய்வதால் மாநில அரசின் உத்திரவைமீறி அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு.எத்தனையோ ஊழல்வழக்குகள் விசாரணையின்றி தூசிபடிந்து இருப்பது யாவரும் அறிந்ததே .தேவையான பொருளாதார உதவியை சமூக ஆர்வமுள்ள மக்களிடம் கேட்டுபெறுங்கள் .இந்த ஒன்றை செய்தீர்களானால் நீங்கள் நாட்டின் ஹீரோவாக மதிக்கப்படுவீர் .


Siva Balan
அக் 29, 2025 18:12

அனைத்து எதிர்கட்சிகளும் பொய் சொல்கிறது. வாங்கியது ஒரு போஸ்டிங்கிற்கு 40 இலட்சம்.


rajasekaran
அக் 29, 2025 18:02

இதில் என்ன ஒற்றுமை என்றால் எந்த ஒரு எதிர் கட்சியும் dmk government ஐ டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லவே இல்லை. இதுவே aiadmk ஆட்சியில் நடந்து இருந்தால் இந்நேரம் சுடலை போச்சு உலகமே போச்சு என்று ஊரை குறு போட்டு அமர்க்களம் படுத்துயிருப்பார்கள்.


Iyer
அக் 29, 2025 16:25

CBI விசாரணை மிகவும் அவசியம் தான். சந்தேகமேயில்லை. INVESTIGATION + PROSECUTION எல்லாம் 6 மாதம் காலக்கெடு கொடுத்து முடிக்கவேண்டும். ED இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அவ்வளவு லஞ்சப்பணத்தையும் கைப்பற்றி கருவூலத்தில் அடிக்கவேண்டும். லஞ்சம் கொடுத்து வேலை பெற்றோரையும் சும்மாவிடக்கூடாது. அவர்களையும் 10 வருடம் உள்ளெ தள்ளினால்தான் லஞ்சம் பாதியாவது ஒழியும்.


புதிய வீடியோ