உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருடிய மணலுக்காக ரூ.3,500 கோடி! அரசுக்கு செலுத்த உத்தரவு

திருடிய மணலுக்காக ரூ.3,500 கோடி! அரசுக்கு செலுத்த உத்தரவு

சென்னை : திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் திருடிய ஆறு தனியார் நிறுவனங்கள், 3,500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36agksqt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன.

சட்ட விரோதம்

இத்தகைய இயற்கை சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்த 2012 முதல் 2013 வரை, அதிக அளவில் தாது மணல், சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக புகார் எழுந்தன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து, தாது மணல் கடத்தல் குறித்து விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக, 2013 முதல் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.இக்குழு பல்வேறு கட்டமாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அளித்தது. சுரேஷ் அளித்த அறிக்கையில், 'தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட பிறகும், அதற்கு முன்பும், அதாவது, 2000 முதல் 2016ம் ஆண்டு வரை, சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 'இதை கணக்கிட்டு, மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 5,832 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், 'திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து, 1.01 கோடி டன் மணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. 'இதில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு ஜனவரியில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உரிய விளக்கம் அளிக்கவில்லை; இழப்பீடு செலுத்துவது தொடர்பாகவும் பதில் அளிக்கவில்லை.

அரசுக்கு இழப்பீடு

இந்த சூழ்நிலையில், மூன்று மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய ஆறு நிறுவனங்களிடம் இருந்து, 3,528.36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க, தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.திருநெல்வேலி மாவட்டத்தில், வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 2002 - 2003 மற்றும் 2013 - 14 ஆகிய ஆண்டுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக, 2,195 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, திருநெல்வேலி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவு

இது போல் மற்ற நிறுவனங்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த, சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த ஆறு நிறுவனங்களும், அரசுக்கு செலுத்த வேண்டிய 3,528.36 கோடி ரூபாயை, 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SIVA
ஜன 23, 2025 21:39

திருடப்பதாக கூறப்படும் மண்ணின் அளவு ஆயிரம் கோடி கிலோ , ஒரு கிலோ மணலுக்கு அபராதம் மூன்று ரூபாய் ஐம்பது பைசா ,என்ன கொடுமை சரவணன் இது ......


R chandar
ஜன 23, 2025 18:10

Excess of money earned and asset purchase during operatios should be ceased and credited to reasury


ஆரூர் ரங்
ஜன 23, 2025 12:17

அபராதம் மட்டும் செலுத்தி விட்டால் அரசால் திருட்டு மன்னிக்கப்படும். சிறைதண்டனை கிடையாது.ஏனெனில் திருடியவர்கள் திராவிஷ பைனான்சியர்களாச்சே


ஆரூர் ரங்
ஜன 23, 2025 10:29

திருட்டு ஆட்சி


Kasimani Baskaran
ஜன 23, 2025 09:30

அப்படியே உடனே செலுத்திவிடுவார்கள்... அரசும் உலக வங்கிக் கடனையெல்லாம் உடனே அடைத்துவிடும். நீதிமன்றம், வழக்கு என்று இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்.


அப்பாவி
ஜன 23, 2025 09:01

2000 முதல் 2013 வரை ஆட்சியில் இருந்தவங்களை தூக்கி சிறையில் வெக்கணும்.


குமரன்
ஜன 23, 2025 08:12

தமிழக ஊடகங்களில் பல மத்திய அரசை மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பது இதுபோன்ற காரணங்கள் தான்


VENKATASUBRAMANIAN
ஜன 23, 2025 07:45

நீதிமன்றம் தானாகவே விசாரித்ததினால் இது வெளிவந்தது. இல்லையெனில் மூடி மறைத்து இருப்பார்கள். வேறு சிலர் உள்ளனர். இனிமேல் அது தெரியவரும்


Samy Chinnathambi
ஜன 23, 2025 06:38

தாது மணல் திருடுவது என்னவோ இப்போ தான் தமிழக அரசுக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு பீலா... சிங்கம் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரை வச்சதே வி.வி மினரல்ஸ் அப்படிங்கிற பேருல தோரியம் கலந்த மண்ணை கப்பலில் கடத்தி தலைமுறையா சம்பாதிச்சு இப்போ அவரோட மகனுங்க நல்ல படியா படிச்ச பொறியியல் கல்லூரி முதல் பல கல்லூரிகளை திறந்து, ஹோட்டல் வச்சு தொழில் அதிபர்களா வளம் வருவதை என்ன செய்ய முடிந்தது... ஆளும் கட்சி எதிர்கட்சிகளுக்கு தேர்தல் செலவு என்ற பெயரில் பெரும் தொகையை கொடுத்து அடக்கி வச்சதால எல்லாம் கமுக்கமா நடந்தது. அங்காளிங்க பங்காளிங்க எல்லாம் அங்கங்க மண்ணை, மலையை ஒடச்சு வித்து தின்னுட்டு இருக்காங்க.. இந்த கிரானைட், மணல் கடத்தலில் மட்டும் எவ்வளவு கொலைகள்? அதனை எப்படி எல்லாம் கஞ்சா மாடல் அரசு காத்து இருக்குன்னு பட்டியல் போட்டா தலை சுத்தும்..


visu
ஜன 23, 2025 06:18

ED வழக்குகள் சூடு பிடிக்கின்றன மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு சிறு தொகையாவது வசூலித்து நேர்மையான அரசாக காட்டிக்கொள்ள வேண்டாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை