உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளைப் பலி கொடுப்பதுதான் திராவிட மாடலா: அரசுக்கு சீமான் கேள்வி

அதிகாரிகளைப் பலி கொடுப்பதுதான் திராவிட மாடலா: அரசுக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசின் நிர்வாகத் தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவது தான் திராவிட மாடலா' என, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா?

அலட்சியமாக செயல்படுவதா?

ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகள் அரங்கேறி கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து அரசு பாடம் கற்கவில்லையா? பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்?

அரசு ஊழியர்கள்

அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப் பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று புதிய பழக்கங்களை வலிந்து திணிப்பது யார்? தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவ்வாறு நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது? அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்?

இடமாற்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் போலீசார் பலியாக்கப்பட்டனர். தற்போது பள்ளி தலைமையாசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு, அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடைபெற்றது என்பதை எப்படி நம்ப முடியும்? தலைமையாசிரியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்? சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசிக்கு வழங்கி உள்ள இடமாற்ற தண்டனையை தமிழக அரசு திரும்ப வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 07, 2024 21:29

முருகன் மாநாடு நடத்தியதால் திருட்டு மு கவிற்கு சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட இடைஞ்சலை போக்க மதம் மாறிய கிருத்துவ அடிமை ஆசிரியரை வைத்து இவர்கள் ஆடிய நாடகம். இல்லையென்றால் வேறு ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மக்களிடம் இருந்து மறைக்க திருடர்கள் ஆடும் நாடகம். சமீபத்திய கார் ரேஸ் மூலமாக மக்களிடம் ஏற்பட்ட கெட்ட பெயரை மடை மாற்ற திருடர்கள் நடத்தும் நாடகம். அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா என்று குத்தாட்டம் போட்டால் கெடாத மாணவர்கள் இவர் பாவம் புண்ணியம் பற்றி பேசியதால் கேட்டு விட்டார்களாம்.


அப்பாவி
செப் 07, 2024 17:21

அந்த மகாவிஷ்ணு இதுமாதிரி பேசுவாருன்னு எதிர்பார்க்கலை. அதான் அவரையும்.புடிச்சு உள்ளே போட்டாச்சு. பாவம். அவரை போன ஜென்மத்தில் செஞ்ச பாவம். ஒரு வருசமாவது ஜெயிலில் புளிற்ற களி சோறு திங்க வேண்டியிருக்கும். தனக்குன்னு வரும்போதுதான் தெரியும்


Sathyanarayanan Sathyasekaren
செப் 07, 2024 21:21

சில நாட்களுக்கு முன்னால் கிருத்துவ பள்ளியின் தலைமை ஆசிரியையின் மகன் பல மாணவிகளை பாலியல் கொடுமைகள் செய்தானே, மற்றோரு கிருத்துவ பள்ளியில் மேரிமாதவின் சிலையை மாணவர்கள் தூக்கிவந்தர்களே, அவர்களை ஏன் கைது செய்யவில்லை?


T.sthivinayagam
செப் 07, 2024 15:10

பாஜக இன்னும் சீமான் பேச்சை சப்போட்டுக்கு வைத்து கொள்ளும் நிலமையில் தான் தமிழகத்தில் உள்ளதா


சமூக நல விரும்பி
செப் 07, 2024 14:32

திமுக நிர்வாகிகளே இப்படி எல்லோரையும் தூண்டி விட்டு பின்னர் அரசு நடவடிக்கை என்ற பெயரில் நாங்கள் சமூக நீதி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.


R.MURALIKRISHNAN
செப் 07, 2024 14:27

சர்வாதிகாரி வட கொரியாவை பின்பற்றுவார்


Vijayakumar
செப் 07, 2024 14:21

அந்த சொற்பொழிவாளர் மாணவர்களுக்கு பாவம் செய்யக்கூடாது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார். முற்பிறவியில் செய்யும் பாவத்தின் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்கிறார். எந்த கடவுளை பற்றியும் அவர் குறிப்பிடவில்லை. எந்த மதம்/ஜாதி பற்றியும் பேசவில்லை. கிறித்துவ மதத்தில் கூட அடுத்த பிறவி உள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு. கிளப்பியது ஒரு பார்வையற்ற ஆசிரியர். நானு ம் ஒரு மாற்று திறனாளி தான். எங்களை போன்றோருக்கான சிறப்பு கல்வி பயிலகங்கள் அனைத்தயும் நடத்துவது யார் என்று அனைவரும் அறிந்ததே . அவ்வ்வாசிரியர் எங்கு பயின்றிருப்பார் என்பது இப்போது தெளிவாக புரிந்திருக்கு ம்.


Svs Yaadum oore
செப் 07, 2024 12:38

இந்த சம்பவமே மதம் மாற்றிகள் செய்த நாடகம் ."முதன்மை கல்வி அலுவலர்" அல்லது "மாவட்ட கல்வி அலுவலர்" அனுமதி இல்லாமல் ஒரு அரசு பள்ளிக்குள் தனியார் நிகழ்ச்சி நடத்தவே முடியாது .....பிறகு எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது?? ....இவனுங்களே கூப்பிட்டு கூட்டம் நடத்துவார்களாம் ...சொல்லி வைத்தது போல அங்கே மாற்றுத்திறனாளி ஆசிரியர் கேள்வி கேட்பாராம் ..அதை பதிவு செய்து இவனுங்களே வெளியிடுவார்களாம் ....உடனே அதை வைத்து ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவது ....இது காலம் காலமாக மதம் மாற்றிகள் செய்து வரும் நாடகம் ...ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னதும் அப்படித்தான் .....


புதிய வீடியோ