உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்பு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறைந்த அளவிலான செவிலியர்கள் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றினால், அவர்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இது குறித்து குழு அமைத்து, 6 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும், என்று கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், செவிலியர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியத்தை தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

hathi rathan
ஏப் 22, 2025 18:02

அணைத்து செவிலியர்களும் செவிலியர் கல்லூரியில் படித்து, நர்சிங் கவுன்சில் லைசென்ஸ், பெற்று அரசாங்கம் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்று, வேளைக்கு வந்தவர்கள், ஒரு முழு நேரம் அரசாங்க செவிலியர் செய்வும் வேலையை இவர்களும் செய்கிறார்கள்,இவர்களுக்கான உரிமை மறுக்க படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி இவர்கள் எதையும் கேட்க வில்லை, .


Prabakaran J
ஏப் 22, 2025 17:48

Thirppu godown la irrunthirukalam, TN gov-High court -consolidated pay nurses. comedy villayatta irrku.


GMM
ஏப் 22, 2025 13:26

செவிலியர் பணி கடினமானது. தொகுப்பூதிய செவிலியர்கள் மீது நிரந்தர செவிலியர்கள் போல் பொறுப்பு நிர்ணயிக்க முடியாது. நிதி ஒதுக்கீடு இருக்காது. தொகுப்பூதிய ஆசிரியர் போன்ற பிற அரசு பணிக்கும் செல்லும். நிதி, பாதுகாப்பு விசயங்களில் நீதி தலையீடு கூடாது. அத்தியாவசிய பணியாளர்கள் தவிர நிதி நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கட்டத்தில் நீதிபதி சம்பளம் கூட நிறுத்த வேண்டி வரும்.


Amar Akbar Antony
ஏப் 22, 2025 13:04

டாஸ்மாக் வருமானம் வானத்தை நோக்கி உயர்கிறது. இவர்களுக்கு கொடுத்தால் என்ன?


sankaranarayanan
ஏப் 22, 2025 13:04

செவிடன் காதில் ஊதிய சங்குபோன்றுதான் இதை சட்டை பண்ண போகிறார்கள் இப்போது பணம் இல்லாததால் தேர்தல் முடிந்தபின் கவனிப்போம் என்பார்கள் பிறகு அவர்களே ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்ற எண்ணம்தான்


V Venkatachalam
ஏப் 22, 2025 13:01

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்றும் துண்டு சீட்டு சுடாலின் பேசுவாரா? அல்லது வழக்கம் போல் நல்லாட்சி நடப்பது எதிர் கட்சி எடப்பாடிக்கு பொறாமையாக இருக்கிறது என்று பேசுவாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை