உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

தனியாக வசிக்கும் வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வீட்டில் தனியாக வசித்து வரும் வயதானவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது பலத்த கேள்விகளை எழுப்புவதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூன் 08, 2025 22:02

மொத்தத்திலேயே வொவொரு தமிழனின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. திமுக ஆட்சியில் அதிக கொலை, கொள்ளை குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், ஊழல்கள் என்று பலவித பிரச்சினைகள்.


புரொடஸ்டர்
ஜூன் 08, 2025 20:46

நீங்களே செய்துவிட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்லி நாடகமாடுகிறீர்களா?


Thravisham
ஜூன் 08, 2025 21:55

ஓர் 200 ரூவாவுக்காக இவ்வளவு கேவலமான பதிவா


Bala
ஜூன் 08, 2025 23:34

ஒன்னமாதிரி கொத்தடிமைகளையும் டாஸ்மாக் கஞ்சா குடிமகன் களையும் உள்ள புடிச்சுப்போட்டு லாடம் கட்டினா உண்மைய கக்குவானுங்க.


Ragu
ஜூன் 09, 2025 06:36

ஏண்டா உனக்கே இது அசிங்கமா இல்ல. 2௦௦ ரூவா நீ.


TR Kuppusamy
ஜூன் 09, 2025 11:28

உங்க வீட்டிலும் இப்படி நடந்தால் இந்த மாதிரிதான் பதிவிடுவீர்களா?


Ram
ஜூன் 08, 2025 20:06

திராவிட கட்சிகள் உள்ளவரை கொலை கொள்ளை தான்


J.Isaac
ஜூன் 09, 2025 01:13

உ.பி, ம.பி ???


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 19:31

தமிழர்கள் தானே கொல்லப்படுகிறார்கள் , எங்களுக்கு வோட்டு வந்தால் சரி என்று ரோகின்யாக்களும் , பங்களாதேசிகளையும் உள்ளே வேறு வேறு பெயரில் குடியமர்த்துவது எப்போது தடுக்கப்படுகிறதோ அப்போதுதான் தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம்


முக்கிய வீடியோ