உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் தொழிலாளர் பிரச்னை: அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்!

சாம்சங் தொழிலாளர் பிரச்னை: அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்!

சென்னை: காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினர்.

சாதாரண கோரிக்கை

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rcid8npl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் முதல்வரை சந்திக்க உள்ளோம். சங்கத்தை பதிவு செய்யாத காரணத்தினால் தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். முறைப்படி பதிவு செய்து கொடுத்தால், வழக்கை வாபஸ் பெறுவார்கள். சங்கம் வைப்பது சாதாரணமான கோரிக்கை. அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை கோரிக்கை. அதற்கு மறுப்பு தெரிவிப்பது ஏன்? அதனை நிறைவேற்றி கொடுங்கள். தொழிற்சங்க தலைவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணுங்கள் என்பதுதான் எங்களது கோரிக்கை.தமிழகம் முழுதும், காவல்துறைக்கு முதல்வர் தான் பொறுப்பு. போலீஸ் ஸ்டேசனில் ஒரு காவலர் அத்துமீறினார் என்பதற்காக அதற்கு எப்படி முதல்வர் பொறுப்பாக இருக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான துறையாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. பந்தலை பிரிப்பதற்கும், 400 பேரை கைது செய்ய வேண்டியதற்கும் அவசியம் என்ன ?அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒட்டு மொத்த காவல்துறையை குறை சொல்லவில்லை. காஞ்சிபுரம் காவல்துறையை மட்டும் சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு உரிமை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. இதனை திரும்ப பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். அவர் தலையிட்டால் தான் தீர்வு கிடைக்கும். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற முறையில் இரண்டொரு நாளில் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். நீதிமன்ற வழக்கை சாக்கு போக்காக சொல்லாமல், அரசு நேரடியாக முடிவு எடுக்க முடியும். அப்படி எடுத்தால் வழக்கு செயலிழந்து போகும். அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. பதிவாளர் என்ற முறையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு சங்கத்தை பதிவு செய்யும் அதிகாரம் உள்ளது. அது சட்டப்பூர்வமானது. இதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தயக்கம். இது தான் பிரச்னையின் புள்ளியாகவும், மூலமாகவும் உள்ளது. இந்த தயக்கத்தை தவிர்த்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன் வர வேண்டும். 17 ஆண்டுகளாக தொழிற்சங்கத்தை அமைக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக உள்ளோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை. தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம். சங்கம் வைக்க ஜனநாயக உரிமை உள்ளது என்றார்.

நிறுவனத்தின் தவறு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் : சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு சுமூகமாக தீ்ர்வு காண விரும்புகிறோம். நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொழிலாளர்கள் சங்கம் வைக்க சட்ட ரீதியில் உரிமை உண்டு. 16 ஆண்டுகளாக சங்கம் வைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை. நிறுவனம் தொழிலாளர்களை நல்ல முறையில் அணுகியிருந்தால் சங்கம் வைக்க முன்வந்திருக்க மாட்டார்கள். தவறு நிறுவனத்திடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

kulandai kannan
அக் 10, 2024 09:38

ஸ்டாலினுக்கு முற்பகல் ஸ்டெர்லைட், பிற்பகல் சாம்சங்.


Kasimani Baskaran
அக் 10, 2024 05:53

இடது சாரிகள் தலையெடுத்து எந்த நிறுவனமும் வெளங்கியது கிடையாது. சர்வதேச அளவில் போட்டித்தன்மை இல்லை என்றால் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும். நிறுவனம் நன்றாக ஓடினால் தொழிலாளர்களை நன்றாகவே கவனித்துக்கொள்வார்கள்.


Mani . V
அக் 10, 2024 05:43

என்ன ஒரு டஜன் பொறை கூடுதலாக வாங்க வேண்டும். அனைத்தும் ஸாரி அனைவரும் வாலை ஸாரி கையை ஆட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள்.


J.V. Iyer
அக் 10, 2024 04:36

பஸ்மாசுரன் தன் தலையிலேயே கைவைத்து பஸ்மம் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. தீய கட்சியின் ஆட்சி மட்டுமல்ல, தீய கட்சியே அழிந்துவிடும் நாள் அருகில் ... மிகவும் அருகில் உள்ளது குமாரு.


r ravichandran
அக் 10, 2024 02:34

சாம்சங் நிறுவனம் தொழில் சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரை தலைவராக ஏற்று கொண்டு தொழில் சங்கம் நடத்த தயார் ஆக உள்ளது. ஆனால் வெளியில் இருந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவரை, அங்கு பணி புரியாத ஒருவரை கொண்ட தொழில் சங்கம் அமைக்க ஒப்பு கொள்ள முடியாது என்று உறுதியாக இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி வேலை நிறுத்தம். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்கம் அமைக்க அனுமதி கொடுத்த பாக்ஸ்கான், நோக்கியா நிறுவனங்கள் பல தொல்லைகள், வேலை நிறுத்தம் என்ற அவதிகள் பட்டு நிறுவனங்களை மூடி விட்டு சென்று விட்டன. பல ஆயிரம் தொழிலாளிகள் வேலை இழந்து நடு தெருவுக்கு வந்தது தான் மிச்சம்.


Venkatesh
அக் 09, 2024 23:20

யாரு.... இவனுங்க ரெண்டு பேருக்கும்.. ..


Anu Sekhar
அக் 09, 2024 23:08

நல்ல கம்பெனிகள் இங்கு வருவதே இந்த யூனியன் தொல்லை இல்லாமல் இருக்கத்தான்.. அவங்களையும் விரட்டி விடுங்க. முதலீடுகள் இனி வந்தமாதிரிதான்.


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 23:00

சாம்சங் வேறு மாநிலம் சென்றால் அதைவிட வேறு அவமானம் இந்த விஷயத்தில் இருக்க முடியாது .... புதிய தொழில்கள் தமிழகத்துக்கு வர வாய்ப்பேயில்லை ..... அதைவிட அமெரிக்காவுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கத்தான் / சுற்றிப்பார்க்கத்தான் போனேன் என்று ஒப்புக்கொண்டுவிடலாம் ....


KavikumarRam
அக் 09, 2024 21:43

நல்ல தடவிக்குடுங்கடா. வருத்தமா இருக்காம். முதல்வரை குத்தம் சொல்லவில்லையாம், காஞ்சிபுரம் காவல்துறையை மட்டும் குத்தம் சொல்றானுங்களாம். பதவிக்கும் பணத்துக்கும் எந்த லெவல்லயும் கீழ விழுந்து பம்முவானுங்க. ஆனா சென்னை ஏர் ஷோவுல அஞ்சு பேர் பரிதாபமா இறந்ததும் மத்திய அரசு என்ன செஞ்சதுன்னு கேப்பானுங்க கயவழிப்பயலுக.


ஆரூர் ரங்
அக் 09, 2024 21:35

பாதிக்கு மேல் இங்கு சீன மொபைல்தான். பெரிய போட்டியாளர் சாம்சங் ஐ விரட்டியடிக்கும் சதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை