உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது

கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது

சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, 'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறு வனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, கடந்த ஆக., 1ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக, துாய்மை பணியாளர்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், ஆங்காங்கே துாய்மை பணியாளர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டினர். போஸ்டரில், 'சென்னை மாநகராட்சி கமிஷனர் அவர்களே... சட்டத்திற்கு விரோதமாக 2,000 துாய்மைப் பணியாளர்களை, 'ராம்கி' ஒப்பந்ததாரரிடம் வீசி எறிந்து, எமது வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு, எங்களது கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த பெரிய மேடு போலீசார், போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

rama adhavan
அக் 21, 2025 20:55

எதற்கு கைது எல்லாம். கடந்து போய் இருக்கலாம். இப்போது தீபாவளி சமயத்தில் எதிர்ப்பு போராட்டம் வரும். குப்பை அகற்றப்படாமல் குவியும். அப்புறம் பேச்சு வார்த்தை. முடிவு. இது எல்லாம் அரசுக்கு மழை காலத்தில் தேவையா?


Raj
அக் 21, 2025 17:54

தொடர் கைது தி.மு.க விற்கு அழிவு காலம் தான். மற்ற கட்சியினருக்கு வெற்றியை உறுதி செய்கிறார்கள்.


தாரா
அக் 21, 2025 15:11

15 வருட உழைப்பை உறிஞ்சு விட்டு சக்கைகளாக வெளியே தள்ளி விட்டு விட்டார்கள். அவர்களின் சாபம் சும்மா விடாது.


ديفيد رافائيل
அக் 21, 2025 14:14

உண்மையை பார்த்து பயப்படும் திமுக


ديفيد رافائيل
அக் 21, 2025 14:13

உண்மைக்கு மதிப்பில்லை


chennai sivakumar
அக் 21, 2025 12:05

ஏழையை கண்டால் மோழையும் பாயும். என்ன செய்வது??


Ramesh Sargam
அக் 21, 2025 08:52

ஏன் கைது செய்யவேண்டும். போஸ்டர் ஒட்டுவது ஒரு குற்றமா? தமிழக அரசு, மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு குற்றமாக தெரியவில்லை. தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்துவது, உங்களுக்கு குற்றமாக தெரிகிறதா?


சமீபத்திய செய்தி