மாசு வாரிய உறுப்பினர் செயலராக சரவணகுமார் நியமன ம்
சென்னை:மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் பதவிக்கு, தகுதியான நபரை தேர்ந்தெடுப்பதற்காக, தமிழக அரசு ஒரு தேர்வுக் குழுவை அமைத்தது. அந்தக்குழு உரிய நடைமுறையை பின்பற்றி, சரவணகுமார் என்பவரை புதிய உறுப்பினர் செயலராக தேர்வு செய்தது. அதன்படி, அவரை நியமனம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அவர் வாரியத்தின் இணை தலைமை சுற்றுச் சூழல் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்று ஆண்டுகள் இப் பதவியை வகிப்பார்.