இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சென்னை:இஸ்லாமிய மாணவர்களுக்கு, வக்ப் வாரியம் வாயிலாக, உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பொருளாதார தடையால் உயர் கல்வியை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ - மாணவியருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்கு, வக்ப் வாரியம் வாயிலாக உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, 2,000 மாணவ -- மாணவியருக்கு தலா 10,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதன் அடையாளமாக, 10 மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.