உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவியர் பிரதமரை பார்க்கவே வந்தனர்!: பிரசாரத்தில் ஈடுபடவில்லை; பா.ஜ., விளக்கம்

பள்ளி மாணவியர் பிரதமரை பார்க்கவே வந்தனர்!: பிரசாரத்தில் ஈடுபடவில்லை; பா.ஜ., விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற 'ரோடு ஷோ 'வில் பள்ளிக்குழந்தைகள் ஆர்வம் மிகுதியால் தன்னெழுச்சியாக பங்கேற்று பிரதமருக்கு ஆரவாரம் செய்தனரே தவிர கட்சி சார்பில் நாங்கள் பங்கேற்க செய்யவில்லை என்று பா.ஜ.,தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட ' ரோடு ஷோ ' நிகழ்ச்சியில் கோவையில் கடந்த மார்ச் 18 அன்று நடந்தது. இதில் 2.5 கி.மீ துாரத்திற்கு பிரதமர் திறந்த வாகனத்தில் மக்களை பார்த்து கைகளை அசைத்தவாறு மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் வரை சென்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியரும் பங்கேற்றதாக தி.மு.க., சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9cp6i13z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, ‛‛ பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எந்த அடிப்படையில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்'' என்று கேட்டு கோவை மாவட்ட பா.ஜ.,தலைவர் ரமேஷ் குமாருக்கு, கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதற்கு சுரேஷிடம் அளித்த விளக்கத்தில், ‛‛ இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மகளிர், குழந்தைகள், வயோதிகர்கள் என்று பலரும் பிரதமரை நேரில் காண வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலும், தன்னெழுச்சியாகவே வருகை தந்தனர்'' என்று ரமேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து ரமேஷ்குமார் கூறியதாவது: தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 16 மாலை 3:00 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை நாங்கள் முழுமையாக தெரிந்து கொண்டோம். அதன் படி நாங்கள் பிரதமர் மோடி 'பங்கேற்ற ரோடு ஷோ ' வில் எவ்விதமான தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறவில்லை. பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடியை வரவேற்க தாங்களாகவே வருகை தந்துள்ளனர்.அவர்கள் பிரதமருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தவோ, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது, என்று எந்த ஒரு தேர்தல் பிரசார பணியிலும் ஈடுபடவில்லை. அவர்களது விருப்பம் பிரதமர் மோடியை நேரில் பார்க்க வேண்டும் அவ்வளவு தான். அதற்காக மட்டுமே வருகை தந்துள்ளனர்.ஜனநாயக நாட்டில் பள்ளி மாணவர்கள் பிரதமரை நேரில் பார்க்க வருவதில் எந்த தவறும் இல்லை. இதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது தான் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை வடக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவருக்கு விரிவான விளக்கத்தை அளித்து விட்டேன். இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Dharmavaan
மார் 21, 2024 04:15

சாஹு திமுக கொத்தடிமை ஈரோட்டில் தெரிந்தது


சோழநாடன்
மார் 20, 2024 23:56

அரசுமுறை பயணத்தில் மாணவர்கள் ஒன்றிய தலைமை அமைச்சரைச் சந்திப்பதை இயல்பாக எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் பரப்புரை வீதியுலாவில் மாணவர்கள் பாஜக என்னும் அரசியல் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவரை சந்திப்பது என்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்பதே உண்மை


Ramesh Sargam
மார் 20, 2024 23:19

திமுகவுக்கு வெயில் காலத்தில் 'குளிர் ஜுரம்' எடுக்க ஆரம்பித்துவிட்டது.


JaiRam
மார் 20, 2024 20:16

வர்ற கமெண்ட் பாத்தா பிரியாணி கூட்டத்துக்கு கொஞ்சம் பீதி கிளம்பி தான் இருக்குது


தாமரை மலர்கிறது
மார் 20, 2024 20:15

பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அது அவர்களின் ஜநாயக உரிமை.


sankaranarayanan
மார் 20, 2024 20:03

இவர்கள் பள்ளிகளின் உள்ளெ சென்று எல்லா மாணவ மாணவிகளிடமும் நீட் தேர்வு வேண்டாமென்று கையெழுத்து பெறலாம் ஆனால் இங்கே அவர்களாகவே வெளியில் வந்து பிரதமரை பார்ப்பதற்கு இவர்கள் ஆட்சேபமா


venugopal s
மார் 20, 2024 17:05

ஸ்ஸ் அப்பா, இந்த ஆதரவு கொடுப்பது எவ்வளவு கஷ்டமான வேலையாக இருக்கிறது!


Velan Iyengaar
மார் 20, 2024 16:56

இவர்கள் தேர்தல் நடத்தும் விதம் எப்படி இருக்கும்?? இந்த விஷயத்தில் இந்தக்கட்சி மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை


sridhar
மார் 20, 2024 17:14

கையும் களவுமாக பணத்தோடு பிடிபட்ட இதுவரை நடவடிக்கை இல்லை.


Velan Iyengaar
மார் 20, 2024 16:54

அவர்களாகவே பார்க்க வந்த மாதிரியா நிற்கிறார்கள்?? வரிசையாக நிற்கவைத்து யாரோ ஓவருவர் அவர்களை கட்டுப்படுத்ததுவது போல அல்லவா புகைப்படம் இருக்கு??


sridhar
மார் 20, 2024 17:15

திமுக கூட்டத்துக்கு நான் ஒரு பத்து பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் திமுக மேல் நடவடிக்கை எடுப்பார்களா.


Ramanujadasan
மார் 20, 2024 17:17

அவர்கள் என்ன திமுக தொண்டர்களா ? இருப்பதை மாணவர்கள் சார் வரிசையாக தான் நிற்பார்கள் , அந்த ஒழுங்கை கற்று கொடுப்பது தான் பள்ளிக்கூடம் , அது சரி நீங்கள் பள்ளி கூடம் சென்று படித்து இருக்கிறீர்களா ? இருந்தால் அந்த ஒழுங்கு தெரியும்


பேசும் தமிழன்
மார் 20, 2024 18:47

கண்டிப்பாக.... திமுக கூட்டத்துக்கு.. பஸ்களில் அழைத்து வந்தது போல் கண்டிப்பாக இல்லை.


Velan Iyengaar
மார் 20, 2024 22:14

டேய்.... எவ்ளோ முட்டு கொடுத்தாலும் அசிங்கப்பட்டது அசிங்கப்பட்டது தான்... விதிமீறல்... விதி மீறல் தான்.... மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம்... நியாயமான தேர்தல் கமிஷனாக இருக்கும் பட்சத்தில் இது மன்னிக்கமுடையாத குற்றம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 20, 2024 16:54

நான் பிறந்த சிற்றூரில், எனது சிறு வயதில், எனக்கு யாரென்றே தெரியாத (பல ஆண்டுகளுக்குப் பின்னர் தெரிந்து கொண்ட) பிரதமர் நேருவின் அம்பாசிடர் கார் சர் சர் என கடந்து சென்ற சில நொடிகளுக்காக பள்ளிக்கு விடுமுறை விட்டு, நாளெல்லாம் சாலை ஓரத்தில் ஆசிரியர்களுடன் நின்றிருந்தது ஏனோ நினைவுக்கு வருகின்றது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி